மார்டின் கப்திலின் காட்டடி பேட்டிங், சான்ட்னரின் அபாரமான பந்துவீச்சு ஆகியவற்றால், டுனாடினில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 4 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. 220 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்து, 4 ரன்னில் தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் விருது மார்டின் கப்திலுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் எந்த நாட்டு அணி வீரர்களைப் புகழ்வதென்றதே தெரியவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டாய்னிஷ், டேனியல் சாம்ஸ் இருவரின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைத்தது. அதேநேரம் கப்திலின் காட்டி ஆட்டம் பார்த்தவர்களை பிரமிக்க வைத்தது.
» ரோஹித் அரை சதம்: இந்திய அணி நிதான ஆட்டம்: இங்கிலாந்துக்கு நம்பிக்கையளித்த கோலியின் விக்கெட்
விளாசலில் இறங்கிய ஸ்டாய்னிஷ் 37 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். டேனியல் சாம்ஸ், 15 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து, 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
நியூஸிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் மீண்டும் தனது காட்டடி ஃபார்முக்குத் திரும்பினார். அதிரடியாக ஆடிய கப்தில் 50 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.
கேப்டன் கேன் வில்லியம்ஸன் 35 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இருவரின் ஆட்டமே நியூஸிலாந்து அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரைப் பெற்றுக் கொடுத்தது.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூஸிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் கப்தில், ஷீபர்ட் ஆட்டத்தைத் தொடங்கினர். ஷீபர்ட் 3 ரன்களில் ரிச்சார்ட்ஸன் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸன், கப்தில் ஜோடி ஆட்டத்தைக் கையில் எடுத்தது.
தனது இயல்பான காட்டடிக்குத் திரும்பிய கப்தில், ஆஸ்திரேலியப் பந்துவீச்சை துவம்சம் செய்து பவுண்டரி, சிக்ஸர்கள் எனப் பறக்கவிட்டார். 27 பந்துகளில் அரை சதத்தை கப்தில் நிறைவு செய்தார். வில்லியம்ஸன் 32 பந்தில் அரை சதம் எட்டினார்.
வில்லியம்ஸன் 53 ரன்கள் சேர்த்த நிலையில் ஸம்பா பந்துவீச்சில் போல்டாகினார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும், 130 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த நீஷம், கப்திலுக்கு ஈடுகொடுத்து ஆடினார்.
ஆஸ்திரேலியப் பந்துவீச்சை நொறுக்கி அள்ளிய கப்தில் 3 ரன்களில் சதத்தைத் தவறவிட்டு ஆட்டமிழந்தார். கப்தில் 50 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்து சாம்ஸ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் வந்த பிலிப்ஸ் (9), கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய கான்வே (2), சான்ட்னர் (0), சவுதி (6) என விரைவாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
173 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூஸிலாந்து அணி, அடுத்த 48 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் ரிச்சார்ட்ஸன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
220 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. மேத்யூவேட், ஆரோன் பிஞ்ச் இருவரும் அதிரடியாகத் தொடங்கினாலும், நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மேத்யூ வேட் 24 ரன்களில் சவுதி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பிஞ்ச் 12 ரன்களில் சோதி பந்துவீச்சில் வெளியேறினார்.
ஐபிஎல் தொடரில் 14.25 கோடிக்கு வாங்கப்பட்ட மேக்ஸ்வெல் இந்த முறையும் சொதப்பி, 3 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆஸ்டின் அகர் (0), மிட்ஷெல் மார்ஷ் (0) இருவரும் சான்ட்னர் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். 13 ஓவர்களில் 113 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தோல்வியின் பிடியில் இருந்தது.
ஆனால், 7-வது விக்கெட்டுக்கு ஸ்டாய்னிஷ், டேனியல் சாம்ஸ் ஜோடி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இருவரும் ஆட்டத்தை வெற்றியின் அருகே இப்படி கொண்டு செல்வார்களா எனக் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை.
13-வது ஓவர்கள் வரை நியூஸிலாந்தின் கைகளில் இருந்த ஆட்டத்தை மெல்ல, இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பக்கத்துக்கு மாற்றினர்.
ஸ்டாய்னிஷ், சாம்ஸ் இருவரும் சேர்ந்து நியூஸிலாந்து பந்துவீச்சைக் கடைசி 7 ஓவர்களில் நொறுக்கி எடுத்தனர். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 78 ரன்கள் தேவைப்பட்டது.
சவுதி வீசிய 16-வது ஓவரில் சாம்ஸ் 3 சிக்ஸர்களையும், ஸ்டாய்னிஷ் பவுண்டரி அடித்து பரபரப்பைக் குறைத்தனர். ஜேமிஸன் வீசிய 17-வது ஓவரில் ஸ்டாய்னிஷ் 2 பவுண்டரிகளும், சாம்ஸ் ஒரு சிக்ஸரையும் விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினர். ஸ்டாய்னிஷ் 22 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
18-வது ஓவரை வீசிய டிரண்ட் போல்ட் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆஸி.யின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். இந்த ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. நீஷம் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் டீப் மிட் விக்கெட்டில் சாம்ஸ் அடித்த பந்தை ஹோல்ஸ் கேட்ச் பிடித்தார். சாம்ஸ் 41 ரன்களில் வெளியேறினார். அடுத்த இரு பந்துகளில் ஸ்டாய்னிஷ் ரன் ஏதும் அடிக்கவில்லை. 4-வது பந்தில் ஸ்டாய்னிஷ் சிக்ஸர் அடித்தார். 5-வது பந்தில் ஸ்டாய்னிஷ் லாங் ஆன் திசையில் சவுதியிடம் கேட்ச் கொடுத்து 78 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் ரிச்சார்ட்ஸன் 4 ரன் அடிக்க ஆட்டம் முடிந்தது.
20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது. நியூஸிலாந்து தரப்பில் நீஷம் 2 விக்கெட்டுகளையும், சான்ட்னர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago