ரூ.14 கோடி மேக்ஸ்வெல் ஒரு ரன்தான்: கான்வே விளாசலில் முதல் டி20 ஆட்டத்தில் நியூஸி. அபார வெற்றி: சோதி பந்துவீச்சில் சுருண்டது ஆஸி. 

By க.போத்திராஜ்

கான்வாயின் காட்டடி ஆட்டம், சவுதி, போல்ட், சோதி ஆகியோரின் பந்துவீச்சால் கிறிஸ்ட் சர்ச் நகரில் இன்று நடந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி தோற்கடித்தது.

ஐபிஎல் தொடரில் ரூ.14.25 கோடிக்கு போட்டி போட்டு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்ட மேக்ஸ்வெல் ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. 185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 17.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

4 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷ் சோதி

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு அதிரடி ஆட்டக்காரர் கான்வாயும், பந்துவீச்சில் இஷ் சோதி, போல்ட், சவுதி ஆகியோரும்தான் காரணம். அதிரடியாக ஆடிய நியூஸிலாந்து பேட்ஸ்மேன் கான்வே 59 பந்துகளில் 99 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். கான்வே சேர்த்த 99 ரன்களில் 10 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, ஆஸ்திரேலிய வீரர்கள் ஹை ரிச்சர்ட்ஸன், சாம்ஸ் ஆகியோரின் பந்துவீச்சில் கப்தில் (0), ஷீபெர்ட் (1), வில்லியம்ஸன் (12) ஆகியோரின் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தொடக்கத்திலேயே கிடைத்த வாய்ப்பை ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தத் தவறவிட்டனர். தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்திருந்தால், நியூஸிலாந்து அணி 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். ஆனால், பந்துவீச்சாளர்கள் சொதப்பியதால், கான்வே அதிரடியில் மிரட்டிவிட்டார்.

4-வது விக்கெட்டுக்கு கான்வே, பிலிப்ஸ் ஜோடி சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். காட்டடி அடித்த கான்வே, ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸருமாகப் பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய கான்வே 36 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

4-வது விக்கெட்டுக்கு பிலிப்ஸ் கான்வே ஜோடி 74 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது. பிலிப்ஸ் 30 ரன்களில் வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு ஜேம்ஸ் நீசத்துடன் சேர்ந்த கான்வே 47 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். நீசம் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

6-வது விக்கெட்டுக்கு சான்ட்னருடன் சேர்ந்து 19 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு கான்வே முக்கியக் காரணமாக அமைந்தார். கடைசி 13 ஓவர்களில் மட்டும் நியூஸிலாந்து அணி 146 ரன்கள் சேர்த்தது. கான்வே 99 ரன்களிலும், சான்ட்னர் 7 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் டேனியல் சாம்ஸ், ரிச்சர்ட்ஸன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

185 ரன்கள் சேர்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. டிம் சவுதி, டிரண்ட் போல்ட் ஆகியோரின் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டு சரிவதுபோல் விக்கெட்டுகளை இழந்தனர். ஆரோன் பின்ச் (1), மேத்யூ வேட் (12), பிலிப்ஸ் (2), மேக்ஸ்வெல் (1) ஆகியோர் விரைவாக வெளியேறினர்.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் போட்டிபோட்டு ரூ.14.25 கோடிக்கு எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல் ஒரு ரன்னில் வெளியேறியது அதிர்ச்சியளித்தது.

5-வது விக்கெட்டுக்கு ஸ்டாய்னிஸ், மார்ஷ் ஜோடி ஓரளவுக்கு நிதானமாக ஆடியது. அதிரடி வீரர் ஸ்டாய்னிஷ் 8 ரன்கள் சேர்த்த நிலையில், சோதி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதிகபட்சமாக மார்ஷ் (45) ரன்களில் ஜேமிஸன் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். கடைசி வரிசையில் களமறிங்கிய ஆஸ்டன் அகர் (23), சாம்ஸ் (1), ரிச்சர்ட்ஸன் (11), கானே ரிச்சர்ட்ஸன் (5) ஆகியோர் வெளியேறினர்.

98 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 33 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. பின்வரிசை வீரர்கள் 5 பேரும், சுழற்பந்துவீச்சாளர் சான்ட்னர், இஷ் சோதி ஆகியோரிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

17.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்து 53 ரன்களில் தோல்வி அடைந்தது. நியூஸிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளையும், போல்ட், சவுதி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்