ஆஸ்திரேலியன் ஓபனில் 9-வது முறையாக ஜோக்கோவிச் சாம்பியன்: 18-வது கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றினார்

By ஏஎன்ஐ


மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோக் ஜோக்கோவிச் 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைபற்றியுள்ளார்.

ஆடவர்ஒற்றையர் பிரிவில்இன்று நடந்த இறுதிஆட்டத்தில் ரஷ்ய வீரர் டேனில் மெத்தவை வீழ்த்தி ஜோக்கோவிச் 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி நிறைவுக் கட்டத்தைஎட்டியுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோக்கோவிச்சை எதிர்த்து தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் மெத்மதேவ் களம் கண்டார்.

இறுதிஆட்டத்தில் முதல் செட்டே இருவருக்கும்இடையே கடும் போராட்டமாக அமைந்தது. டைபிரேக்கரில் சென்ற முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் மெத்மதேவ் வென்றார். முதல் செட்டே இருவருக்கும் இடையே 45 நிமிடங்கள் நடந்தது.

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தரையில் சரிந்த ஜோக்கோவிச்

ஆனால், சுதாரித்துக் கொண்ட செர்பிய வீரர் ஜோக்கோவிச் அடுத்த இரு செட்களையும் 2-6, 2-6 என்ற செட்களில் எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தைக் கைபற்றினார்.

இதன் மூலம் ஜோக்கோவிச் 9-வது ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தையும், தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்ற பெருமையைப் பெற்றார். ஜோக்கோவிச் தனது டென்னிஸ் வாழ்க்கையில் பெறும் 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இது அமைந்தது.

இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ரோஜர் பெடரரும், ரஃபேல் நடாலும் மட்டுமே பெற்றுள்ளனர். அந்த வரையில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் ஜோக்கோவிச் 3-வது இடத்தில் உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்