14-வது ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மிகவும் குறைவான அதாவது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கே எடுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகக்கூடும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சூசமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு தொடரின்போது, ரூ.12.5 கோடிக்கு வாங்கப்பட்ட ராஜஸ்தான் அணிக்குப் பெரிய அளவில் ஸ்மித் கைகொடுக்கவில்லை.
2018-ம் ஆண்டு சீசனில் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை காரணமாக விளையாடவில்லை. ரஹானே கேப்டன்ஷிப்பில் ஓரளவுக்குச் சிறப்பாக ஆடிய ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் வரை 2018-ல் சென்றது. ஆனால், ஸ்மித் வந்தவுடன் ரஹானே கழற்றி விடப்பட்டு, மீண்டும் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் அடுத்த இரு போட்டிகளுக்கும் சாம் கரன் இல்லை
» யார் இந்த ரிலே மெரிடித்? பஞ்சாப் கிங்ஸ் ரூ.8 கோடிக்கு வாங்கிய சர்வதேச அறிமுகம் இல்லாத வீரர்
ஆஸ்திரேலிய அணிக்கு வேண்டுமானால் ஸ்மித் சிறந்த கேப்டனாக இருந்திருக்கலாம். ஆனால், ராஜஸ்தான் அணிக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. கடந்த ஐபிஎல் தொடரில் கடினமாகப் போராடியும் ப்ளே ஆஃப் சுற்றை அடைய முடியவில்லை.
தனிப்பட்ட முறையிலும் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்த ஸ்மித், மற்ற போட்டிகளில் எல்லாம் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து 311 ரன்கள் மட்டுமே தொடரில் குவித்தார். கடந்த ஐபிஎல் போட்டியில் ஸ்மித்தின் ஸ்ட்ரைக் ரேட் 131 ஆகவும், சராசரி 25 ஆக சரிந்துவிட்டது.
இதனால் பொறுமையிழந்த ராஜஸ்தான் அணி ஸ்டீவ் ஸ்மித்தை அணியிலிருந்துவிடுவித்தது. சென்னையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித் பெயர் அறிவிக்கப்பட்டதும் அவரை எடுக்க எந்த அணியும் தயாராகஇல்லை. ஆனால், ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக இருக்கும் டெல்லி கேபிடல்ஸ்அணி ரூ.2.2 கோடி அடிப்படைவிலைக்கு ஸ்மித்தை விலைக்கு வாங்கியது. கடந்த தொடரில் ரூ.12.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்மித் ரூ.2.5 கோடிக்கு இந்த முறை மிகக்குறைவான தொகைக்கு வாங்கப்பட்டார்.
இந்நிலையில் குறைவான தொகைக்கு வாங்கப்பட்டதை நினைத்து ஸ்மித் மிகவும் வேதனையில் இருப்பதால், ஐபிஎல் தொடரிலிருந்து எந்த நேரத்திலும் விலகக்கூடும் என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பிக்ஸ்போர்ட்ஸ் எனும் தளத்துக்கு மைக்கேல் கிளார்க் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது
" ஸ்மித் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்பது எனக்குத் தெரியும். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் ஸ்மித் சிறப்பாகச் செயல்படவில்லை. இருப்பினும் அவர் டி20 தொடரில் விளையாட விரும்பினார்.
ஆனால், நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் சிறந்த பேட்ஸ்மேனான ஸ்மித் மிகக்குறைவான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதை நினைத்து எனக்கு வியப்பாக இருக்கிறது. 4 லட்சம் டாலர்களுக்கு குறைவாக அவரை விலைக்கு வாங்கினாலும் நல்ல தொகைதான்.
ஆனால், கடந்த சீசனில் ஸ்மித் பெற்ற தொகையோடு இதை ஒப்பிட்டால், இது மிகக்குறைவு. கடந்த தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்மித் இருந்தார், இந்த முறை ஒருவீராக டெல்லி அணியில் விளையாட உள்ளார்.
ஐபிஎல் தொடருக்காக ஸ்மித் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன் ஏதேனும் சின்ன காயம் அவருக்கு ஏற்பட்டால் கூடவியப்படையத் தேவையில்லை. ஐபிஎல் தொடர் என்பது 8 வாரங்கள் நடக்கும் போட்டித் தொடர், தனிமைப்படுத்தும் காலம் என 11 வாரங்கள் இந்தியாவில் தங்க வேண்டியது இருக்கும். ஆனால், இதுபோன்ற குறைந்த தொகைக்கு ஸ்மித் இந்தியாவில் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என எனக்கு நம்பிக்கையில்லை.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் விராட் கோலிக்கு முந்தைய இடத்தில் ஸ்மித் இருக்கிறார். ஸ்மித் சிறந்த பேட்ஸ்மேனாக இல்லாவிட்டால் அவர் தரவரிசையில் தொலைவில் தானே இருக்கவேண்டும், ஆனால், முதல் 3 இடங்களில் இருக்கிறாரே. "
இவ்வாறு கிளார்க் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago