இசான் கிஷனின் காட்டடி சதத்தில் இந்தூரில் நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பையில் மத்தியப்பிரதேசத்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் குவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்களை ஜார்கண்ட் அணி குவித்துள்ளது.காட்டடி அடித்த இசான் கிஷான் 94 பந்துகளில்173 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 19 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள் அடங்கும்.
விஜய் ஹசாரேக் கோப்பை வரலாற்றில் இதுவரை கடந்த 2010ம் ஆண்டு ரயில்வேஸ் அணிக்கு எதிராக மத்தியப் பிரதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 412 ரன்கள் சேர்த்திருந்ததே அதிகபட்சமாக சாதனை ரன் குவிப்பாக இருந்தது. ஆனால், அதை தற்போது ஜார்க்கண்ட் அணி முறியடித்துவிட்டது.
» யார் இந்த ரிலே மெரிடித்? பஞ்சாப் கிங்ஸ் ரூ.8 கோடிக்கு வாங்கிய சர்வதேச அறிமுகம் இல்லாத வீரர்
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்தூரில் நடந்த எலைட் பி பிரிவு போட்டியில் மத்தியப்பிரதேச அணியும், ஜார்க்கண்ட் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மத்தியப் பிரதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஜார்க்கண்ட் அணியில் கேப்டன் இசாந்த் கிஷன், உத்கர் சிங் ஆட்டத்தைத் தொடங்கினர். உத்கர் சிங் 6 ரன்னில் தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த குமார், இசாந்த் கிஷனுடன் இணைந்து ஸ்கோரை உயர்த்தினார். குமார் நிதானமாக ஆட இசாந்த் அதிரடியாக பேட் செய்தார்.
இசாந்த் கிஷன் அதிரடியில் பந்து பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறந்தது. 74 பந்துகளில் இசான் கிஷன் சதம் அடித்தார். இதில் 12 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 113 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
3-வது விக்கெட்டுக்கு வந்த விராட் சிங்,இசான் கிஷனுடன் இணைந்தார். இசாந்த் கிஷனுக்கு இணையாக விராட் சிங்கும் அதிரடியாக பேட் செய்யவே ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 20 ஓவர்களில் ஜார்க்கண்ட் அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தொட்டது.
காட்டடி அடித்த இசாந்த் கிஷன் 94 பந்துகளில் 173 ரன்கள் சேர்த்து கவுரவ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில்19 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் அடங்கும். 3-வது விக்கெட்டுக்கு இசாந்த் கிஷன், விராட் சிங் இருவரும் 117 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். முதல்தரக் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர் ஒருவர் அடித்த 3-வது அதிகபட்ச ஸ்கோர் என்பதை இசான் கிஷன் பதிவு செய்தார்.
அதன்பின் விராட் சிங்(68) சுமித் குமார் (52), அங்குல் ராய்(72) ரன்கள் சேர்த்து ஜார்க்கண்ட்அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியப் பங்காற்றினர். பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 9விக்கெட் இழப்புக்கு ஜார்க்கண்ட் அணி 422 ரன்கள் குவித்தது.
423 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமால இலக்குடன் களமிறங்கிய மத்தியப்பிரதேச அணி, 15 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் சேர்த்து தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. ஜார்க்கண்ட் அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago