சென்னையில் நேற்று நடந்த 14-வது ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் 8 அணிகளும் சேர்ந்து 57 வீரர்களை விலைக்கு வாங்கியுள்ளன. ஒவ்வொரு வீரரும் ஏதாவதொரு வெற்றிடத்தை நிரப்புவார் என எதிர்பார்ப்பில் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.
2021-ம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலம் சென்னையில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள், 115 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் என 292 வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். 61 இடங்களுக்கு 292 வீரர்கள் ஏலத்தில் போட்டியிட்டதில் இறுதியாக 57 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அது குறித்த சுருக்கமான பார்வை
சென்னை சூப்பர் கிங்ஸ்
கே.கவுதம்(ரூ.9.25கோடி), மொயின் அலி(ரூ.7கோடி), சத்தேஸ்வர் புஜாரா(ரூ.50லட்சம்), கே.பகத் வர்மா(ரூ.20லட்சம்), சி ஹரிநிசாந்த்(ரூ.20லட்சம்), ஹரிசங்கர் ரெட்டி(ரூ.20லட்சம்).
மொயினஅலி, கிருஷ்ணப்பா கவுதம் இருவரும் பேட்டிங் ஆல்ரவுண்டர்கள். சென்னையில் நடக்கும் மெதுவான ஆடுகளத்தில் புஜாராவின் ஆட்டம் உதவியாக இருக்கும் ஆனால், டூப்பிளசிஸுக்கு மாற்றாக எந்த வீரரையும் எடுக்கவில்லை
» 2021 ஐபிஎல் ஏலம்: இதுவரை எந்தெந்த அணிகள் யாரை வாங்கியுள்ளன? சுருக்கமான பார்வை
» சிஎஸ்கே ஜெர்சியில் விளையாட எதிர்பார்ப்புடன் உள்ளேன்: புஜாரா நெகிழ்ச்சி
டெல்லி கேபிடல்ஸ்
டாம் கரன்(ரூ.5.25 கோடி), ஸ்டீவன் ஸ்மித்(ரூ.2.2 கோடி), சாம் பில்லிங்ஸ்(ரூ.2கோடி), உமேஷ் யாதவ்(ரூ.ஒருகோடி), ரிபால் படேல்(ரூ.20லட்சம்), விஷ்னு வினோத்(ரூ.20லட்சம்), லுக்மான் மேரிவாலா(ரூ.20லட்சம்), சித்தார்த்(ரூ.20லட்சம்)
விக்கெட் கீப்பர் ரிஷப்பந்துக்கு மாற்றாக நன்றாக பேட்டிங் செய்யக்கூடிய விக்கெட் கீப்பராக உள்ளூர் வீரர் விஷ்னு வினோத்தும், வெளிநாட்டு வீரராக சாம் பில்லிங்ஸும் உள்ளனர். ஆனால், மார்க் ஸ்டாய்னிஷ்க்கு மாற்றாக யாரும் இல்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சகிப் அல் ஹசன்(ரூ.3.2 கோடி), ஹர்பஜன் சிங்(ரூ.2 கோடி), பென் கட்டிங்(ரூ.75 லட்சம்), பவன் நெகி(ரூ.50லட்சம்), ஷெல்டன் ஜேக்ஸன்(ரூ.20லட்சம்), வெங்கடேஸ் ஐயர்(ரூ.20லட்சம்), வைபவ் அரோரா(ரூ.20லட்சம்)
ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ ரஸலுக்கு மாற்றாக சகிப் அல்ஹசன், பென் கட்டிங்இருவரும் எடுக்கப்பட்டுள்ளனர். சுனில் நரேனுக்கு மாற்றாக ஹர்பஜன் சிங் இருப்பார். ஆனால் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் இல்லை.
மும்பை இந்தியன்ஸ்
நாதன் கூல்டர் நைல்(ரூ.5கோடி), ஆடம் மில்னே(ரூ.3.2கோடி), பியூஷ் சாவ்லா(ரூ.2.4 கோடி), ஜேம்ஸ் நீஷம்(ரூ.50லட்சம்), யுத்விர் சாரக்(ரூ.20லட்சம்), மார்கோ ஜான்சென்(ரூ.20லட்சம்), அர்ஜுன் டெண்டுல்கர்(ரூ.20லட்சம்)
பஞ்சாப் கிங்ஸ்
ஜை ரிச்சார்ட்ஸன்(ரூ.14கோடி), ரெலி மெரிடித்(ரூ.8கோடி), ஷாருக் கான்(ரூ.5.25கோடி), மோய்செஸ் ஹென்ரிக்ஸ்(ரூ.4.2 கோடி), டேவிட் மலான்(ரூ.1.5 கோடி), பேபியன் ஆலன்(ரூ.75லட்சம்), ஜலஜ் சக்சேனா(ரூ.30லட்சம்), சவுரவ் குமார்(ரூ.20லட்சம்) உத்கார் சிங் (ரூ.20லட்சம்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
கிறிஸ் மோரிஸ்(ரூ.16.5 கோடி), ஷிவம் துபே(ரூ.4.4 கோடி), சேட்டன் சகாரியா(ரூ.1.2 கோடி), முஸ்தபிசுர் ரஹ்மான்(ரூ.ஒரு கோடி), லியாம் லிவிங்ஸ்டோன்(ரூ.75 லட்சம்), அகாஷ் சிங்(ரூ.20லட்சம்), கே.சி.கரியப்பா(ரூ.20லட்சம்), குல்திப் யாதவ்(ரூ.20லட்சம்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
கைல் ஜேமிஸன்(ரூ.15 கோடி), கிளென் மேக்ஸ்வெல்(ரூ.14.25 கோடி), டேனியல் கிறிஸ்டியன்(ரூ.4.8), சச்சின் பேபி(ரூ.20லட்சம்), ராஜத் பட்டிதர்(ரூ.20லட்சம்), முகமது அசாருதீன்(ரூ.20லட்சம்), சுயஸ் பிரபுதேசாய்(ரூ.20லட்சம்), கே.எஸ்.பரத்(ரூ.20லட்சம்)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
கேதார் ஜாதவ்(ரூ.2கோடி), முஜிப் உர் ரஹ்மான்(ரூ.1.5கோடி), சுஜித்(ரூ.30 லட்சம்)
முக்கிய செய்திகள்
விளையாட்டு
58 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago