இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்கியதிலிருந்து இந்திய அணியைக் கிண்டல் செய்வதை கெவின் பீட்டர்ஸன் வழக்கமாக வைத்துள்ளார். 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றியைக் கூட பி டீமை வென்றதற்கு வாழ்த்துகள் என மிகவும் கிண்டலாக பீட்டர்ஸன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கவாஸ்கர்-பார்டர் டெஸ்ட் தொடரை வென்றதில் இருந்து இந்திய அணியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று கொண்டாட்டத்தில் இருந்தபோது பீட்டர்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஆஸ்திரேலியத் தொடரை வென்று இந்திய அணி வீரர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், உண்மையான கிரிக்கெட் அணி (இங்கிலாந்து) அடுத்த சில வாரங்களில் இந்தியா வர உள்ளது. உங்கள் சொந்த மண்ணில் அவர்களை வெல்ல வேண்டும்.
ஆதலால், எச்சரிக்கையாக இருங்கள். இந்திய அணியினர் வெற்றியைக் கொண்டாடுவதை இரு வாரங்களுக்குக் குறைத்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி 227 ரன்களில் தோல்வி அடைந்தது. அப்போதும் இந்திய அணியைக் கிண்டல் செய்து பீட்டர்ஸன் ட்வீட் செய்தார்.
அதில், “இந்திய அணி வீரர்களை நான் இதற்கு முன் எச்சரித்திருந்தேன். நினைவிருக்கிறதா? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றபின் அதிகமாகக் கொண்டாடாதீர்கள், ஆடாதீர்கள் என்று எச்சரித்திருந்தேன் நினைவிருக்கிறதா” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. போட்டியின் 4-வது நாளிலேயே இந்திய அணி வாகை சூடியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து 4-வது இடத்துக்குச் சரிந்துள்ளது.
இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை பீட்டர்ஸன் மிகவும் கிண்டல் செய்து, நீங்கள் உண்மையான இங்கிலாந்து அணியை வெல்லவில்லை. பி டீமைத்தான் வென்றுள்ளீர்கள் என்று கிண்டல் செய்துள்ளார்.
பீட்டர்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “இங்கிலாந்து பி டீமை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள்” என வெற்றியை ஏற்க முடியாமல் கிண்டல் செய்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மொயின் அலியை, சுழற்சி முறை ஓய்வுக்காக நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தையும் பீட்டர்ஸன் சாடியுள்ளார்.
அதில், “மிகவும் கடினமான சவாலான இடத்தில் டெஸ்ட் போட்டியில் வெல்ல சிறந்த அணியை நீங்கள் தேர்வு செய்யாவிட்டால், உங்களால் உங்கள் உணர்ச்சியைக்கூட வெளிப்படுத்த முடியாது.
ஆஸி.க்கு எதிராக 2005-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் ஆஸி.யை நாம் வென்றோம். அது இங்கிலாந்து கிரிக்கெட்டின் தோற்றத்தை மாற்றியது. இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் இங்கிலாந்து அணியின் பெயர் அனைத்து இடங்களிலும் பேசப்பட வேண்டுமானால், சிறந்த அணியைத் தேர்வு செய்தால்தான் முடியும். மொயின் அலி ஒரு டெஸ்ட் போட்டியோடு நாடு திரும்புகிறார். வாவ்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago