அஸ்வின் துல்லியத்தை முறியடிக்க முயன்று தோல்வியடைந்த டீன் எல்கர், ஆம்லா

By இரா.முத்துக்குமார்

தென் ஆப்பிரிக்கா இன்னிங்சில் தொடக்கத்தில் திறமையுடன் நன்றாகக் கணித்து ஆடிவந்த டீன் எல்கர், ஹஷிம் ஆம்லா ஆகியோர் அஸ்வின் சவாலை முறியடிக்க முயன்று தோல்வி அடைந்தனர்.

ஹஷிம் ஆம்லாவும் அஸ்வினின் துல்லியமான பந்து வீச்சை முறியடிக்க முனைந்து 43 ரன்கள் எடுத்திருந்த போது மேலேறி வந்து ஆட முயன்றார். ஆனால் பந்து அவரது மட்டையைக் கடந்து விருத்திமான் சஹாவின் நெஞ்சில் பட்டு பைல்களை கீழே தள்ளிய போது ஆம்லா கிரீஸுக்கு வெளியே இருந்தார்.

விக்கெட் கீப்பர் டேன் விலாஸும் அதே ஓவரில் ஸ்வீப் ஆடமுயன்று ஆட்டமிழந்தார். இவையெல்லாம் சூழ்நிலைக்கு அப்பாற்பட்ட ஷாட் தேர்வுகள்.

மிகவும் கடினமான பிட்சில் டீன் எல்கரும், ஆம்லாவும் 76 ரன்களைச் சேர்த்தனர். எல்கர் இந்த உடையும் பிட்சில் 151 நிமிடங்கள் நின்று 123 பந்துகளைச் சந்தித்து 37 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

கடுமையாக பந்துகள் திரும்பும் ஆட்டக்களங்களில் தன்னால் நிலைத்து ஆட முடியும் என்பதை டீன் எல்கர் தன்னம்பிக்கையுடன் இன்று நிரூபித்தார். அதாவது அஸ்வின், ஜடேஜா, மிஸ்ரா உள்ளிட்டோரின் பிளைட்டட் பந்துகளுக்கு மட்டையை இறுக்க பிடிக்காமல் தளர்வான கைகளுடன் பந்தை திறம்பட தடுத்தாடி அசத்தினார். குறிப்பாக மட்டையைச் சுற்றி பீல்டர்களை கோலி நிறுத்தியிருந்த போதும், இவரது தடுப்பாட்டம் இந்திய பவுலர்களுக்கு சவாலாக அமைந்தது.

இந்நிலையில் இந்தப் பிட்சில், கடும் நெருக்கடியை சமாளிக்க முடியாமலோ என்னவோ, அஸ்வினை அடித்து விட முடிவெடுத்து சக்தி வாய்ந்த ஸ்வீப் ஷாட்டை. பந்து திரும்பும் எதிர்த்திசைக்கு அடிக்க முயன்றார். பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு பாயிண்டில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது. அதாவது லெக் திசையில் அவர் அடிக்க முயன்ற ஷாட் நேருக்கு மாறாக ஆஃப் திசையில் பாயிண்டில் கேட்ச் ஆனது.

அந்தத் தருணத்தில் அத்தகைய ஷாட் தேவையில்லை. ஆனால், அவர் வித்தியாசமாக ஏதாவது செய்ய முயன்று பார்த்தார். ஒருவேளை சரியாக சிக்கியிருந்தால் இன்று அவரது தினமாகக் கூட மாறியிருக்கும்.

ஏமாற்றத்துடன் அவர் களத்தை விட்டு நகரும் போது, ‘வாட் அ ஷாட் மேன்’ என்று இந்திய வீரர்களில் ஒருவர் ஒரு கேலி உவகையுடன் கூறியது தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு நிச்சயம் கேட்டிருக்கும்.

ஆம்லாவும், டீன் எல்கரும் ஆடிய இத்தகைய ஷாட்களினால் தென் ஆப்பிரிக்கா இந்தியாவைக் காட்டிலும் குறைவான ரன் எண்ணிக்கையில் முடிந்து போனது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்