சென்னையில் 2-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியில் 4 அதிரடி மாற்றங்கள்

By ஏஎன்ஐ


சென்னையில் நாளை நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் 4 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் பயணம் செய்து இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

இதைத்தொடர்ந்து 2-வது டெஸ்ட்போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது. வலது முழங்கையில் ஏற்பட்ட வலி காரணமாக, இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும் 3 மாற்றங்களை இங்கிலாந்து அணி நிர்வாகம் செய்துள்ளது. ஜோஸ் பட்லருக்கு அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு ஓய்வு அளி்க்கப்பட்டுள்ளது.

சுழற்ச்சி முறையில் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் கடைபிடிப்பதால், ஆன்டர்ஸனுக்கும் சுழற்பந்துவீச்சாளர் டாம் பெஸ்ஸுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அளித்த பேட்டியியில் “ இந்தியாவுக்கு எதிராக நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், டாம் பெஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 4 பேருக்கும் பதிலாக ஸ்டூவர்ட் பிராட், பென் ஃபோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளுக்கு ஆன்டர்ஸன் தயாராக வேண்டும் என்பதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்துவரும் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக பென் ஃபோக்ஸ் செயல்படுவார். கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் ஸ்பெலிஸ்ட் பேட்ஸ்மேனாக ஜானி பேர்ஸ்டோ அணியில் சேர்க்கப்படுவார்” எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்ளி காயம் காரணமாக முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் 3-வது டெஸ்ட் போட்டிக்கு சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

விளையாடும் 11 வீரர்கள் கொண்ட அணி விவரம்:

ஜோ ரூட்(கேப்டன்), டான் சிப்ளி, ரோரி பர்ன்ஸ், டான் லாரன்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஒலே போப், பென் ஃபோக்ஸ், மொயின் அலி, ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், ஜேக் லீச், ஓலே ஸ்டோன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்