இந்திய அணியின் ‘ சுவர் புஜாரா’; அவரை வீழ்த்துவதுதான் எனது குறிக்கோளாக இருந்தது: பாட் கம்மின்ஸ் வெளிப்படை

By பிடிஐ


இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பியன் செங்கல் சுவராக இருந்த புஜாராவின் விக்கெட்டை வீழ்த்துவதுதான் எனது குறிக்கோளாக இருந்தது என்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் தெரிவி்த்தார்.

ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டனான பாட் கம்மின்ஸ் இ்ந்திய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் 2-வது முறையாக வென்று தாயகம் திரும்பியது. காபா டெஸ்டில் வெல்லவும், சிட்னியில் டிரா செய்யவும் புஜாராவின் பேட்டிங் முக்கியக் காரணமாக அமைந்தது.

புஜாராவின் பேட்டிங் குறித்து கிரிக்இன்போ தளத்துக்கு பாட் கம்மின்ஸ் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா சென்றபின் என்னுடைய நோக்கம் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்துவதாகத்தான் இருந்தது. இந்தியாவின் செங்கல் சுவராக புஜாரா என்று முதலிலேயே நினைத்தேன்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி வந்திருந்தபோது கூட தொடரை வெல்வதற்கு புஜாராதான் முக்கியக் காரணமாக அமைந்தார். நடுவரிசை பேட்டிங்கில் பாறை போன்று நிலைத்து நின்று ஆடக்கூடியவர் புஜாரா.புஜாராவுக்கு எதிராக இந்த டெஸ்ட் தொடரில் நான் பந்துவீசியதும், அவரைஆட்டமிழக்கச் செய்ய முயற்சித்ததும் போராட்டமாகவே கருதுகிறேன்.

சிட்னி டெஸ் போட்டியை இந்திய அணி டிரா செய்யவும், காபா டெஸ்ட் போட்டியில் வெல்லவும் புஜாரா முக்கியக் காரணமாக அமைந்தார். இந்தத் தொடரில் மிகப்பெரிய தடத்தை புஜாரா பதித்துவி்ட்டார். புஜாராவுக்கும், கம்மின்ஸ்க்கும் இடையே நடந்த போட்டிதான் இந்த தொடரில் கவனிக்கப்பட்டதாக இருந்தது என நான் நினைக்கிறேன்.

8இன்னிங்ஸில் 5 முறை புஜாராவை நான் ஆட்டமிழக்கச் செய்தேன். முதல் 2 போட்டிகளுக்குப்பின், நிச்சயம் இந்திய அணியை வேறு விதத்தில் எடுத்துச் செல்வார் புஜாரா என நினைத்தேன். பந்துவீச்சாளர்களுக்கு பெரும் அழுத்தம் இருக்கும் என நினைத்தேன். என்னைப் பொருத்தவரை புஜாராவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினமானது, ஒருபோதும் எந்தபந்தைக் கண்டு மிரளுவதாக நான் பார்க்கவில்லை.

ரிஷப் பந்த் உண்மையில் கிளாஸ் பிளேயர். சிட்னி டெஸ்ட், காபா டெஸ்ட் இரு போட்டிகளையும் வெற்றி நோக்கி அழைத்துச் சென்றுவிட்டார். ரிஷப்பந்தின் பேட்டிங் பற்றி எனக்கு நன்கு தெரியும். எப்போது பந்த் அதிரடி ஆட்டம் ஆடுவார், எது அவருடைய ஸ்கோரிங் பகுதி என தெரிந்து வைத்திருந்தேன். அடுத்த தொடருக்கு முன்பு, ரிஷப் பந்துக்காக நான் அதிகமான நேரம் செலவிட வேண்டியது இருக்கும்

இவ்வாறு கம்மின்ஸ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்