ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கோலிக்கு அடிமேல் அடி: ரூட் திடீர் முன்னேற்றம்

By பிடிஐ


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இ்ந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முந்தினார்.

ெசன்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் ரூட் 883 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

விராட் கோலி 852 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.ஆஸ்திரேலியத் தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடததன் காரணமாக ஐசிசி தரவரிசையில் தொடர்ந்து கோலி பின்தங்கி சென்று வருகிறார். 2-வது இடத்தில் இருந்த கோலி, தற்போது 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப்பின் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ரூட் இந்த அளவு உயர்வு பெறுவது இதுதான் முதல்முறையாகும்.

2-வது இடத்தில் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை பிடிக்க இன்னும் ரூட்டுக்கு 9 புள்ளிகள்தான் தேவை. முதலிடத்தில் இருக்கும் வில்லியம்ஸனைப் பிடிக்க 36 புள்ளிகள்தான் தேவைஎன்பதால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குள் ரூட் முதலிடத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 86 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 746 புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ரிஷப்பந்த் 91 ரன்கள் சேர்த்ததன் மூலம் 700 புள்ளிகளுடன் தரவரிசையில் தொடர்ந்து 13-வது இடத்தில் நீடிக்கிறார். அரைசதம் அடித்த ஷுப்மான் கில் 7 இடங்கள் முன்னேறி 40-வது இடத்தையும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 2 இடங்கள் நகர்ந்து, 81வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இங்கிலாந்து வீரர் சிப்ளி 87,16 ரன்கள் அடித்ததன் மூலம் தரவரிசையில் 11 இடங்கள் உயர்ந்து 36-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ேபட்ஸ்மேன்கள் வரிசையில் 6-வது இடத்தில் பாபர் ஆசம், 7-வது இடத்தில் புஜாரா மாற்றமில்லாமல் நீடிக்கின்றனர். 8-வது இடத்தில் ஹென்றி நிகோலஸ், 9-வது இடத்தில் பென் ஸ்டோக்ஸ், 10-வது இடத்தில் வார்னர் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 771 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், பும்ரா 769 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் நீடிக்கின்றனர். முதலிடத்தில் ஆஸி. வீரர் கம்மின்ஸ், 2-வது இடத்தில் ஸ்டூவர்ட் பிராடும்நீடிக்கின்றனர்.

ஆன்டர்ஸன் ஒரு இடம் முன்னேறி 826 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் லீச் 37-வது இடத்துக்கும், டோமினிக் பெஸ் 41-வது இடத்துக்கும் நகர்ந்துள்ளனர்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து வெற்ற பெற வைத்த மே.இ.தீவுகள் அணியின் அறிமுக வீரர் கையில் மேயர்ஸ் 8 புள்ளிகளுடன் 70-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அறிமுகப் போட்டியிலேயே மே.இ.தீவுகள் அணியில் ஒரு வீரர் இரட்டை சதம் அதிலும் 4-வது இன்னிங்ஸில் அடித்தது இதுதான் முதல்முறையாகும்.

பிராத்வெய்ட் 53-வது இடத்திலும், ஜோமல் வாரிகன் 62-வது இடத்திலும், கார்ன்வெல் 65-வது இடத்திலும் பந்துவீச்சாளர்கள் வரிசையில் முன்னேறியுள்ளனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் பாக் அணியின் பேட்ஸ்மேனும் தொடர்நாயகன் விருது வென்ற, ரிஸ்வான் 19 இடங்கள் நகர்ந்து 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்