ஒரு தோல்விக்கே இப்படியா? டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு பலத்த அடி: முதலிடத்தில் இங்கிலாந்து

By பிடிஐ

சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வியைத் தொடர்ந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்ல இங்கிலாந்து வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. 420 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய இந்திய அணி 192 ரன்களில் ஆட்டமிழந்தது. கேப்டன் கோலி மட்டும் அதிகபட்சமாக 72 ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணியின் இந்தத் தோல்வி மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு நியூஸிலாந்து அணி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது.

நியூஸிலாந்து அணியுடன் விளையாடப் போகும் அணி இந்தியாவா அல்லது இங்கிலாந்து அணியா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய அணி இருந்தது.

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின், இந்திய அணி மோசமாக 4-வது இடத்துக்கு 68.3 சதவீதப் புள்ளிகளுடன் சரிந்துள்ளது. அடுத்துவரும் 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் அல்லது 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால்தான் இறுதிச்சுற்றுக்குச் செல்ல முடியும்.

அதேசமயம், இங்கிலாந்து அணி 70.0 சதவீதப் புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 3-1 என்ற கணக்கிலோ அல்லது 3-0, அல்லது 4-0 என்ற கணக்கில் இந்திய அணியை வென்றால் இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றுக்குச் சென்றுவிடும்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தாலோ அல்லது, 1-0 என்ற கணக்கிலோ, 2-1 என்ற கணக்கிலோ அல்லது 2-0 என்ற கணக்கிலோ முடிந்தாலோ ஆஸ்திரேலிய அணி இறுதிச் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்றதன் மூலம 43.3 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கும், தென் ஆப்பிரிக்க அணி 30 சதவீதப் புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கும் சரிந்துள்ளது. மே.இ.தீவுகள் அணி 28.8 சதவீதப் புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்