ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றபின் அதிகமாக ஆடாதீங்க, கொண்டாடாதீங்க என்று உங்களை எச்சரித்தேன். நினைவிருக்கிறதா? என்று இந்திய அணியின் டெஸ்ட் தோல்விக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் கிண்டலடித்துள்ளார்.
சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 420 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி 192 ரன்களில் ஆட்டமிழந்து 277 ரன்களில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 72 ரன்களும், கில் 50 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்றினர். கேப்டன் கோலி தலைமையில் சந்திக்கும் தொடர் 4-வது தோல்வியாகும்.
ஆஸ்திரேலிய பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி, நாடு திரும்பியது. அந்தக் கொண்டாட்டத்தில் இந்திய அணி இருந்தபோது, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து, ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை எழுப்பியது.
அதில், “அனைத்துத் தடைகளையும் கடந்து ஆஸ்திரேலியத் தொடரை வென்றதால், இந்திய அணி வீரர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், உண்மையான கிரிக்கெட் அணி அடுத்த சில வாரங்களில் இந்தியா வர உள்ளது. உங்கள் சொந்த மண்ணில் அவர்களை வெல்ல வேண்டும்.
ஆதலால், எச்சரிக்கையாக இருங்கள். இந்திய அணியினர் வெற்றியைக் கொண்டாடுவதை இரு வாரங்களுக்குக் குறைத்துக் கொள்ளுங்கள்” என இங்கிலாந்து அணியின் வருகையை குறிப்பிட்டு பீட்டர்ஸன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்ததையடுத்து, பீட்டர்ஸன் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.
அதில், “இந்திய அணி வீரர்களை நான் இதற்கு முன் உங்களை எச்சரித்திருந்தேன். நினைவிருக்கிறதா? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றபின் அதிகமாகக் கொண்டாடாதீர்கள், ஆடாதீர்கள் என்று எச்சரித்திருந்தேன் நினைவிருக்கிறதா” எனக் கேட்டு கிண்டல் செய்துள்ளார்.
இங்கிலாந்து அணி வெளிநாடுகளில் சென்று பெறும் 6-வது வெற்றி இதுவாகும். இற்கு முன் தென் ஆப்பிரிக்கா, இலங்கையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago