டெஸ்ட் போட்டிகள்தான் 3 நாட்களில் முடிவடைந்து விடுகிறது என்றால் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் சில 2 நாட்களிலேயே முடிவடைந்து வருகிறது.
2015-16 ரஞ்சி சீசனில் இதுவரை விளையாடப்பட்ட 96 போட்டிகளில் 7 போட்டிகள் 2 நாட்களிலும், 14 போட்டிகள் 3 நாட்களிலும் முடிந்துள்ளது.
“இது இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு போதும் நன்மை பயக்கப்போவதில்லை” என்று இது குறித்து ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் அவர் அண்டர்-19 வீரர்களுடன் இருந்து வரும் திராவிட் கூறியதாவது:
"இத்தகைய பிட்ச்களைப் பார்க்கும் போது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. பெங்கால்-ஒடிஷா மேட்ச் பற்றி மட்டும் நான் குறிப்பிடவில்லை. (ஒடிஷா 37 ரன்களுக்குச் சுருண்டது), இந்த ஆண்டு ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகள் பிட்ச் அனைத்தும் இப்படித்தான் உள்ளன. பந்துகள் முதல் அரை மணிநேரத்தில் ‘ஸ்கொயராக’ திரும்புகின்றன. போட்டிகள் 2 அல்லது 3 நாட்களில் முடிவடைந்து விடுகின்றன, மிக மோசமாக பிட்ச்கள் அமைக்கப்படுகிறது. இது இந்திய கிரிக்கெட்டின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
சர்வதேச போட்டிகளில் பிட்ச் என்பது முற்றிலும் வேறு கதை. அங்கு நமக்குச் சாதகமாக பிட்ச்களை அமைத்து வெற்றி பெறுவது பிரதானம். ஆனால் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் நாம் சர்வதேச கிரிக்கெட்டுக்காக வீரர்களை உருவாக்குகிறோம். ஆனால், இந்த விக்கெட்டுகளை நான் பார்த்தவரையில் மிக மோசமானவை என்றே கூற வேண்டியுள்ளது. இம்மாதிரி போட்டிகளை நடத்துவது கால, ஆற்றல் மற்றும் பண விரயம்.
வெறும் முடிவு காண்பதற்காக அல்ல ரஞ்சி டிராபி கிரிக்கெட் என்பது, சர்வதேச தரத்துக்கு நாம் வீரர்களை உருவாக்குவது அவசியம். இப்படியே மோசமான பிட்சில் நாம் விளையாடி வந்தால் நல்ல கிரிக்கெட் வீரர்களை நாம் உற்பத்தி செய்யப் போவதேயில்லை.
இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். நல்ல பிட்ச்களை உருவாக்க கட்டாயப்படுத்தப் படவேண்டும். நமக்கு கிரீன் டாப் விக்கெட்டுகள் தேவையில்லை, அதற்காக 2 நாட்களில் முடியும் பிட்ச்களும் தேவையில்லை. சும்மா சாதாரணமாக வீசுபவர்களெல்லாம் 6, 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றுகின்றனர். நாம் இதில் கவனமாக இருக்க வேண்டும், நிச்சயம் இந்தப் பாதையில் நாம் செல்வதில் விருப்பமில்லை.
நாக்-அவுட் போட்டிகள் நடுநிலை மைதானங்களில் நடைபெறுவது ஆறுதல் அளிக்கிறது. குறைந்தபட்சம் இந்தப் போட்டிகளிலாவது நல்ல பிட்ச்கள் அமைக்கப்படும் என்று நம்பலாம்.
இவ்வாறு கூறினார் ராகுல் திராவிட்.
சர்வதேச கிரிக்கெட் பிட்ச் நாக்பூர், மொஹாலி தரத்துக்கு இருக்கும் போது, அத்தகைய பிட்ச்களில் ஆட வீரர்கள் தேவை என்ற சிந்தனையில் ஒருவேளை ரஞ்சி கிரிக்கெட்டிலும் இப்படிப்பட்ட பிட்ச்கள் அமைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் பலதரப்பிலும் எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago