சென்னை டெஸ்ட் : டாஸ் வென்றது இங்கிலாந்து: இந்திய அணியில் யாருக்கு இடம்?  ஆடுகளம் எப்படி?

By செய்திப்பிரிவு


சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கின்றன. முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். டெஸ்ட் கிரிக்கெட்டி முதன்முதலில் நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் ரூட் அறிமுகமாகினார், விசாகப்பட்டிணத்தில் நடந்த டெஸ்ட் போட்டி ரூட்டுக்கு 50-வது டெஸ்ட் போட்டியாக இருந்தது. ரூட்டின் 100-வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. ஜோஸ் பட்லருக்கு இது 50-வது டெஸ்ட் போட்டியாகும்.

ஆடுகளம் எப்படி

ஆடுகளம் கடினத்தன்மையாக இருப்பதால், பேட்டிங் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும், 3-வது நாளில் இருந்து சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் இரு அணிக்கும் முக்கியம் என்பதால், அதிகமான ரன்களை அடிக்க இரு அணிகளும் முயல்வார்கள். ஆடுகளத்தைப் பார்த்தவுடனே டாஸ் வென்றிருந்தால் நாங்களும் கூட பேட்டிங் செய்திருப்போம் என கோலி தெரிவித்திருந்தார். போட்டியின் 3-வது நாளில் இருந்து ஆட்டம் எந்த திசையில் செல்லும் என்பதை கணிக்க முடியாது. சுழற்பந்துவீச்சாளர்கள் கை ஓங்கிவிடும்.

இங்கிலாந்து அணியில் 3 வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸன், ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ்ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஜேக் லீச், டாம் பெஸ் என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

இந்திய அணியைப் பொருத்தவரை சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஷான்பாஸ் நதீம், ராகுல் சாஹர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளர்.

இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஷாந்பாஸ் நதீம், ராகுல் சாஹர்

இந்திய அணியில் சுழற்பந்துவீச்சுக்கு அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஷான்பாஸ் நதீம் ஆகியோரும் வேகப்பந்துவீச்சுக்கு பும்ரா, இசாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணி விவரம்:
டான் சிப்ளி, ரோரி பர்ன்ஸ், டான் லாரன்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஒலே போப், ஜோஸ் பட்லர், டாம் பெஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜேக் லீச், ஆன்டர்ஸன்

இந்திய அணி விவரம்:
ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், சத்தேஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜின்கயே ரஹானே, ரிஷப்பந்த், வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திர அஸ்வின், ஷாபாஸ் நதீம், இசாந்த் சர்மா, பும்ரா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்