மூத்த வீரர்கள் யாருமின்றி ஆஸி.யை டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீழ்த்தியது உண்மையில் அற்புதமானது: கேன் வில்லியம்ஸன் புகழாரம்

By பிடிஐ

மூத்த வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டபோது, அவர்கள் உதவியின்றி, ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களை வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது உண்மையில் அற்புதமானது என்று நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் புகழாரம் சூட்டினார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. ஆனால், நியூஸிாலந்து அணியுடன் ஃபைனலில் விளையாடும் அணி எதுவென்று இன்னும் முடிவாகவில்லை. இங்கிலாந்து, இந்தியா இடையே நடக்கும் டெஸ்ட் தொடர் முடிவின் அடிப்படையில் ஃபைனலில் மோதும் அணி முடிவாகும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு நியூஸிலாந்து அணி தகுதி பெற்றது குறித்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஸ்போர்ட்ஸ் டுடே யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதை நினைக்கும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியைக் கொண்டுவந்தது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்திய அணியில் மூத்த வீரர்கள் பலர் காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், இளம் வீரர்கள் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் வென்றுள்ளது உண்மையில் அற்புதமானது.

ஆஸ்திரேலியாவில் எப்போது சென்று விளையாடினாலும் கடினமாகத்தான் இருக்கும். சவால் நிறைந்ததாக இருக்கும். ஆனால், இந்திய அணி அங்கு சென்று விளையாடிய விதம், குறிப்பாக இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தியதும், வெற்றி பெற்றதும் குறிப்பிடத் தகுந்தது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டபின், அந்தச் சவாலை இந்திய அணியினர் எதிர்கொண்டார்கள் என நான் நினைக்கிறேன். இந்திய- ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மிகவும் பரபரப்பாகவும், இந்திய அணியின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாகவும் இருந்தது. ரசிகர்களும் இந்தத் தொடரை அதிகமாக ரசித்தார்கள்.

ஐபிஎல் தொடருக்குப் பின், இந்திய அணியினர் ஆஸ்திரேலியா சென்று நீண்ட தொடரில் விளையாடியுள்ளனர். அவர்கள் குடும்பத்தினருடன் நேரத்தைக் கண்டிப்பாகச் செலவிட்டு மகிழ வேண்டும்''.

இவ்வாறு வில்லியம்ஸன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்