இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இப்போது இருக்கும் ஃபார்மில் எப்படி அவரை ஆட்டமிழக்கச் செய்யப் போகிறோம் எனத் தெரியவில்லை என்று இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி வியப்புடன் தெரிவித்தார்.
இந்தியாவில் இங்கிலந்து அணி பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்குகிறது.
சென்னை வந்துள்ள இங்கிலாந்து வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 2-ம் தேதி முதல் இங்கிலாந்து அணியினர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி காணொலி மூலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
» 2-வது ஆஞ்சியோ முடிந்தது: பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
» ஆஸ்திரேலிய டி20 அணியில் இடம் பெற்ற இந்திய வம்சாவளி கார் ஓட்டுநர் மகன்
விராட் கோலி இப்போது சூப்பரான ஃபார்மில் இருக்கிறார். குழந்தை பிறந்துவிட்ட மகிழ்ச்சி, இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற உற்சாகம் என பரபரப்பாக இருப்பார். கோலியை எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்யப் போகிறோம் என எங்களுக்குத் தெரியவில்லை.
உண்மையில் கோலி, வியப்புக்குரிய வீரர், உலகத் தரம்வாய்ந்த பேடஸ்மேன். அவருடன் விளையாடும் போது சக வீரர்களை ஊக்கப்படுத்துவார், அவரும் உற்சாகமாக விளையாடுவார்.
எனக்குத் தெரிந்து விராட் கோலி இந்திய ஆடுகளத்தில் பலவீனமாக பேட் செய்வார் என்று நினைக்கவில்லை. அவ்வாறு அவருக்கு எந்த பலவீனமும் இந்தியக் களத்தில் அவருக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இதையெல்லாம் நினைக்கும் போது, கோலியை எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்யப்போகிறோம் எனத் தெரியவில்லை.கோலி சிறந்த மனிதர், எனக்கு நல்ல நண்பர். நாங்கள் கிரிக்கெட்டை பற்றி அதிகமாகப் பேசமாட்டோம், சிறிதளவே பேசுவோம்.
டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது எனக்கு ஊக்களிப்பதாக இருக்கும்.
என்னை தேர்ந்தெடுக்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படமாட்டேன். விளையாடத் தயாராக இருப்பேன், வாய்ப்புக் கிடைத்தால் சிறப்பாக விளையாடத் தயாராக இருப்பேன்.
இலங்கைக்கு சென்றபோது நான் கரோனாவில் பாதி்கப்பட்ட காலத்தில் 2 டெஸ்ட் போட்டிகளில் நான் விளையாடவில்லை. இருப்பினும் 6 வலைப்பயிற்சி செஷன்களில் தனிமைப்படுத்தி இருந்தபோது பங்கேற்றேன். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒப்பந்தம் முடிந்தபின், சிறிது காலம் ஓய்வெடுத்து, பல்ேவறு லீக் போட்டிகளில் விளையாடினேன். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடமல் போனது வருத்தமாக இருந்தது.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும்போது பந்துவீச்சு, பேட்டிங்கில் மெருகு ஏறும், இரு துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட முடியும். வெள்ளைப்பந்துகளில் விளையாடுவது சிறப்பானது என நான் நினைக்கவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சிவப்புபந்தில் விளையாடும்போது, அதிகமான பந்துகளைப் பேட்ஸ்மேன்கள் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும், பல்வேறு ஷாட்களை ஆடிப்பழகலாம். பந்துவீசினாலும் அதிகமான ஓவர்களை வீச முடியும், பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபடலாம். ஆனால், டி20 போட்டிகளில் சிக்ஸர், பவுண்டரி என ஒவ்வொரு பந்தையும் குறிவைக்க வேண்டும்.
இவ்வாறு மொயின் அலி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago