ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு


ஆஸ்திரேலியத் தொடரை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பிய இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு சென்னை மாநகராட்சி முக்கியப்பதவி வழங்கி கவுரவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த சுந்தர், தற்போது 14 நாட்கள் வீ்ட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு்ள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரையும், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று வெற்றிகரமாக இந்திய அணிநாடு திரும்பியது.

அதிலும் காபா டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூருடன் சேர்ந்து முதல் இன்னிங்ஸில் அடித்த அரைசதம் போட்டியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. பந்துவீச்சிலும் விக்கெட்டுகளை வீழ்திய சுந்தர் ஆல்ரவுண்டராக ஜொலித்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் மாவட்ட தேர்தல் தூதராக நியமித்துள்ளார்.

இதற்கான உத்தரவை சென்னை மாநாகராட்சியின் துணை ஆணையர் (வருவாய்,நிதி) கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி மோகநாத ரெட்டி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், “ வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாகவாக்களி்க்க இருக்கும் இளைஞர்களை தூண்டுவதற்காக வாஷிங்கடன் சுந்தரின் விழிப்புணர்வு வீடியோ முக்கிய பாலமாக இருக்கும். சென்னை இளம் ரசிகர்களின் முக்கிய நாயகராக சுந்தர் இருக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில், “ வணக்கம் சென்னை, நீங்கள் கணித்தது சரிதான். சென்னை மாவட்டத்தின் தேர்தல் விழிப்புணர்வு தூதராக வாஷிங்டன் சுந்தரை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 100 சதவீதம் தேர்தலில் வாக்களிக்க உறுதிஏற்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE