சுழற்பந்துவீச்சை நன்றாக விளையாடக்கூடிய பேர்ஸ்டோவுக்கு இந்தியத் தொடரில் ஓய்வு கொடுக்கலாமா? நாசர் ஹூசைன் கேள்வி

By பிடிஐ


இந்திய சுழற்பந்துவீச்சை நன்றாக விளையாடக் கூடிய ஜானி பேர்ஸ்டோவுக்கு இந்திய டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கும் முடிவை இங்கிலாந்து நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேர்ஸ்டோ 47, 35 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு காரணமாக அமைந்தார். ஆசியக் கண்டத்தில் சுழற்பந்துவீச்சை நன்றாக விளையாடக்கூடிய பேர்ஸ்டோவுக்கு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சுழற்றி முறை விதியின்படி இந்தியத் தொடரில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கு ஓய்வு அளித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவை முன்னாள் கேப்டன் நாசர் ஹூசேன் கடுமையாகச் சாடியுள்ளார். ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு நாசர் ஹூசைன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இங்கிலாந்து அணியில் மூன்று வீரர்கள் சுழற்பந்துவீச்சை நன்றாக விளையாடக் கூடியவர்கள். ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மூன்றாவது வீரர் பேர்ஸ்டோ. ஆனால், பேர்ஸ்டோவை சென்னையில் நடக்கும் இந்திய அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் களமிறக்காமல் ஓய்வு அளிப்பது வியப்பாக இருக்கிறது.இந்த முடிவை முதலில் பரிசீலனை செய்யவேண்டும்.

கரோனா காலத்தில் கோடை காலம் முழுவதும் வீரர்கள் என்ன செய்தார்கள். ஐபிஎல் தொடர், தென் ஆப்பிரிக்கத் தொடர், இப்போது இலங்கைத் தொடர் அடுத்து இந்தியத் தொடர், அடுத்து மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்கள்.. நான் வீரர்களை குறைத்து மதிப்பிடவில்லை.

இந்தியா போன்ற வலிமையான, சிறந்தஅணிக்கு எதிராக மோதும்போது, சிறந்த அணியை அனுப்பி வைக்க வேண்டாமா. முக்கியமான இந்தியத் தொடரில் பேர்ஸ்டோவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமா, சுழற்சி முறையில் ஓய்வு கொடுக்க வேண்டுமா, முக்கியத்துவம் வாய்ந்த தொடரில் சிறந்த வீரர்களை களமிறக்க வேண்டியது அவசியம்.

இந்தியாவுடன் டெஸ்ட் தொடர் முடிந்தபின் அடுத்ததாக இங்கிலாந்து அணி ஆஷஸ் டெஸ்ட தொடருக்காக பிரிஸ்பேன் செல்ல உள்ளது. அப்போது சிறந்த அணியைநாம் அனுப்ப வேண்டுமே. ஆதலால் இந்திய அணி போன்ற சிறந்த அணி்க்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்தே சிறந்த அணியை அனுப்ப வேண்டும். இவ்வாறு நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்