இந்திய அணியில் இப்போது வீரேந்திர சேவாக் இல்லை. விராட் கோலிதான் இருக்கிறார். ஆதலால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பொறுமையைக் கடைபிடித்தால் வெற்றி கிடைக்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிய இந்தியாவுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் இருடெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன.
இந்தியாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டு தொடரை இங்கிலாந்து அணி வெல்ல வேண்டும் என்று பல முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் விரும்புகிறார்கள்.இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், இங்கிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் டாம் பெஸ், லீச் இருவரும் இடம் பெற வேண்டும் என்று முன்னாள் வீரர் ஸ்வான் வலியுறுத்தியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான முதல் சடெஸ்ட் போட்டியில் இருவரும் சேர்ந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஸ்வான் 255 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் 60 விக்கெட்டுகள் இந்தியா, இலங்கை வங்கதேச அணிக்கு எதிராக வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசேனுடன் ஒரு கிரி்க்கெட் நிகழ்ச்சியில் ஸ்வான் பேசியதாவது:
நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் தட்டையானவை என்பதால், பந்துகள் நன்றாக சுழலும், சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும்.
இந்தியாவுக்கு எதிராக நன்றாகக் கட்டுக்கோப்பாக இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசினால், அவர்களும் அந்தப் பந்துவீச்சுக்கு மரியாதை கொடுத்து விளையாடுவார்கள். இந்திய அணியில் தற்போது வீரேந்திர சேவாக் இல்லை. விராட் கோலிதான் இருக்கிறார். விராட் கோலி, சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது, மோசமான பந்து வரும் வரை காத்திருப்பார்.
இந்தியஅணி மிக, மிக பொறுமையானது. அதே போன்று இங்கிலாந்து அணியும் பொறுமையாக இருந்து நாள் முழுவதும் பந்துவீசினால், விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அவர்களுக்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், அப்போது நீங்கள் உங்களின் பிடிமானத்தை இழந்தாலும் அதனால் பராவாயி்ல்லை.
என்னைப் பொருத்தவரை இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியில் ஆஃப் ஸ்பின்னர் லீச் இடம் பெறுவது இங்கிலாந்து வெற்றியை பிரகாசப்படுத்தும். இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு ேநராகப் பந்துவீசுவது, மிடில் ஸ்டெம்ப்பை நோக்கி வீசுவது, மிடில் ஸ்டெம்பை தகர்க்கும்வகையில் பந்துவீசினாலே போதுமாநது.
ஜேக் லீச் நாள்தோறும் 40 ஓவர்கள் பந்துவீசினால், மற்ற வேகப்பந்துவீச்சாளர்களான மார்க் உட், ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட்பிராட் ஆகியோரை மாற்றிப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு ஸ்வான் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago