2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து இலங்கை வீரர் லசித் மலிங்கா விடுவிக்கப்பட்டதையடுத்து, லீக் கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலும் இருந்து ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்தார்.
ஐபிஎல் தொடரில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையைக் கொண்ட மலிங்காவை, 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் விடுவித்து மும்பை இந்தியன்ஸ் அணி முடிவு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த அறிக்கை வெளியான சிலமணிநேரங்களில் மலி்ங்கா இந்த அறிவிப்பை வெளியி்ட்டார். ஏற்கெனவே சர்வதேச ஒருநாள் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மலிங்கா ஓய்வு அறிவித்துவிட்டார்.
இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணியில் விளையாடியபின், டி20 ஓய்வு குறித்து மலிங்கா அறிவிப்பார் எனத் தெரிகிறது.
இதுகுறித்து லசித் மலிங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ என்னுடைய குடும்பத்தாருடன் நடத்திய ஆலோசனைக்குப்பின், நான் அனைத்துவிதமான லீக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற இது சரியான நேரம் என நினைக்கிறேன்.
கரோனா வைரஸ் சூழலில் நான் எந்த நாட்டுக்கும் பயணிக்க முடியாத கடினமான நேரமாக எனக்கு அமைந்துவிட்டது. என்னுடைய முடிவு குறித்து மும்பை அணி நிர்வாகத்திடம் கலந்து பேசினேன். அவர்கள் அடுத்துவரும் ஐபிஎல் ஏலத்துக்கு தயாராகும் நிலையில் இந்த முடிவை முன்கூட்டியே அறிவித்தேன்.
மும்பை இந்தியன்ஸ்அணியில் நான் இருந்தவரை என்னை குடும்பத்தில் ஒருவராகவே நடத்தினர். களத்திலும், வெளியிலும் 100 சதவீதம் நம்பிக்கையளித்து, ஊக்கமளித்து நான் சிறப்பாகச் செயல்பட வைத்தனர்.
நான் கிரிக்கெட் போட்டிகளில் சுதந்திரமாக செயல்படவும் மும்பை அணி நிர்வாகம் அனுமதித்தது. மகிழ்ச்சியான நினைவுகளை சுமந்துகொண்டு, மும்பை அணி நிர்வாகத்துக்கு நன்றி செலுத்தி விடை பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஐபிஎல் தொடரில் 122 ஆட்டங்களில் ஆடியுள்ள மலிங்கா, 170 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 13ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே மலிங்காவின் சிறந்த பந்துவீச்சாக அமைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago