ஆஸ்திரேலியாவுக்கு 2 மாதங்களுக்கும் மேலாக பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்று கோப்பையுடன் இன்று காலை தாயகம் திரும்பினர்.
டெல்லி, மும்பை, பெங்களூரு விமானநிலையத்தில் வந்திறங்கிய இந்திய அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று 2-வது முறையாக கோப்பையை இந்திய அணி வென்றது. அதிலும் ஆஸ்திரேலியாவின் கோட்டை எனக் கருதப்படும் பிரிஸ்பேன் மைதானத்தில் 32 ஆண்டுகளுக்குப்பின் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்திய அணி வரலாறு படைத்தது.
இந்திய அணியின் சாதனையை வெற்றி கிரிக்கெட் உலகம் கொண்டாடி வருகிறது. இந்த வெற்றியைடுத்து, ஆஸ்திரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய அணியினர் இன்று காலை தாயகம் திரும்பினர்.
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்கூர், பிரித்வி ஷா ஆகியோர் மும்பை விமானநிலையத்தில் வந்திறங்கினர். அவர்களுக்கு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், ரசிகர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
மும்பை கிரி்க்கெட் சங்க நிர்வாகிகளான விஜய் பாட்டீல், அஜின்கயே நாயக், அமித் தானி, உமேஷ் கான்வில்கா ஆகியோர் வீரர்களை வரவேற்றனர். விமானநிலையத்திலேயே ரஹானே கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடினார்.
பிரிஸ்பேன் டெஸ்டில் ஹீரோவாகத் திகழ்ந்த ரிஷாப் பந்த் டெல்லி விமானநிலையத்தில் தரையிறங்கினார். நெட் பந்துவீச்சாளராக சென்று ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய 3 பிரிவுகளில் அறிமுகமாகி அசத்திய தமிழக வீரர் நடராஜன் பெங்களூரு விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.
அங்கிருந்து நடராஜனை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த கிராமமான சின்னப்பம்பட்டிக்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ரவிச்சந்திர அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சென்னை விமானநிலையத்துக்கு இன்று காலை வந்து சேர்ந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago