பிரிஸ்பேன் டெஸ்ட்டில் இந்திய அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜன் அறிமுகமாகி சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து, நடராஜனுடன் அஸ்வின், தமிழில் உரையாடியதை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
வறுமையான குடும்பச் சூழல், வாய்ப்புக்காகக் காத்திருந்து நடத்திய போராட்டம், ரப்பர் பந்தில் பயிற்சி என பாதைகள் முழுவதும் முட்களுடன் பயணித்து நடராஜன் இந்திய அணிக்குள் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணிக்குள் நெட் பந்துவீச்சாளராக இடம் பெற்ற நடராஜன், ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர் வரை தனது தனித்திறமையான பந்துவீச்சால் முன்னேறியது குறித்து ஐசிசி, பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளன. தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே முதல் இன்னிங்ஸில் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
» நடராஜன் மீது ‘ஸ்பாட் பிக்ஸிங்’ சந்தேகத்தைக் கிளப்பிய ஷேன் வார்னர்: நெட்டிசன்கள் வறுத்தெடுப்பு
இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், நடராஜன், அஸ்வின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் தமிழலில் பேசி உரையாடியதை பிசிசிஐ, வீடியோவாகத் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.
அஸ்வின் தொகுப்பாளராக மாறி வாஷிங்டன் சுந்தர், நடராஜன், ஷர்துல் தாக்கூர் ஆகியோரைப் பேட்டி கண்டார். அந்தப் பேட்டியில் நடராஜனிடம் அஸ்வின் தமிழில் கேள்விகளை எழுப்பினார்.
அதில், அஸ்வின் பேசுகையில், ''நட்டு..நெட் பவுலராக இருந்த நீங்கள் இப்போது நட்டுவாக மாறி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் எப்படி இருக்கிறது'' எனக் கேட்டார்.
அதற்கு நடராஜனும் தமிழில் பதில் அளித்தார். அவர் அளித்த பதிலில், “ரொம்ப ஹேப்பியா இருக்கு அண்ணா. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதிலும் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு இருக்காது என நினைத்தேன்.
ஆனால், மூத்த வீரர்கள் காயத்தால் இடம் கிடைத்ததை என்னால் நம்ப முடியவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அண்ணா. என்ன பேசுவதென்றே தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.
பின்னர் நடராஜன் தமிழில் பேசியதை பிசிசிஐ தொலைக்காட்சிக்கு ஆங்கிலத்தில் அஸ்வின் வழங்கினார்.
This interaction is all heart ❤️ courtesy @ashwinravi99 & @Natarajan_91
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago