டெஸ்ட் தரவரிசை; கோலியைப் பின்னுக்குத் தள்ளினார் ஸ்மித்; புஜாரா முன்னேற்றம்: ரஹானே சறுக்கல்

By பிடிஐ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய கேப்டன் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் 919 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து 238 ரன்கள் குவித்ததையடுத்து, வில்லியம்ஸன் வலுவான நிலையை அடைந்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் சதம் அடித்ததன் மூலம், 30 புள்ளிகள் பெற்று 900 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்குப் பின், தனது மனைவி பிரசவத்துக்காக இந்தியா திரும்பிய விராட் கோலி 870 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.

ஆஸி. வீரர் லாபுஷேன் தற்போது 866 புள்ளிகளுடன் கோலியை நெருங்கி வருவதால், பிரிஸ்பேன் போட்டியில் அரை சதம் அடித்தாலே, கோலியை 4-வது இடத்துக்கு லாபுஷேன் தள்ளிவிடுவார்.

6-வது இடத்தில் இருந்த கேப்டன் ரஹானே சிட்னி டெஸ்ட்டில் சரியாக விளையாடாததை அடுத்து, இரு இடங்கள் குறைந்து, 756 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.

அதேசமயம், சிட்னி டெஸ்ட்டில் இரு அரை சதங்கள் அடித்த புஜாரா, 2 இடங்கள் முன்னேறி 753 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 36, 97 ரன்களை சிட்னி டெஸ்ட்டில் குவித்ததையடுத்து தரவரிசையில் 19 இடங்கள் முன்னேறி 26-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

ஹனுமா விஹாரி 52-வது இடத்திலும், அஸ்வின் 89-வது இடத்திலும், ஷுப்மான் கில் 69-வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சில் அஸ்வின் 2- இடங்கள் சரிந்து 9-வது இடத்துக்குச் சென்றுள்ளார். பும்ரா 9-வது இடத்திலிருந்து சரிந்து 10-வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா 428 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆஸி. வீரர் கம்மின் முதலிடத்திலும், இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 2-வது இடத்திலும், நியூஸிலாந்து வீரர் நீல் வேக்னர் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்