சிட்னி டெஸ்ட் டிரா: இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் புகழாரம்

By பிடிஐ

சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய அணி டிரா செய்ததை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

அதிலும் டிரா செய்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்த ரிஷப் பந்த், புஜாரா, ஹனுமா விஹாரி, அஸ்வின் ஆகியோருக்குப் பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “இந்திய அணியைப் பார்த்து உண்மையில் பெருமைப்படுகிறேன். குறிப்பாக ரிஷப் பந்த், புஜாரா, அஸ்வின், ஹனுமா விஹாரி ஆகியோரின் பங்களிப்பும், விளையாடியதும் அற்புதமாக இருந்தது. எந்த அணியின் ஓய்வறையில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும் என ஊகிக்க முடியுமா” எனத் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ தலைவர் கங்குலி

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கிரிக்கெட் அணியில் புஜாரா, ரிஷப் பந்த், அஸ்வின் ஆகியோரின் பங்களிப்பையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்திருப்போம். தரமான பந்துவீச்சுக்கு எதிராக 3-வது இடத்தில் இறங்கி பேட் செய்வது எளிதானது அல்ல. 400 விக்கெட்டுகள் எளிதாக வரவில்லை. கடினமாக இந்தியா போராடியது. தொடரை வெல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ட்விட்டரில் கூறுகையில், “இந்திய அணியின் போராட்டம், விடாமுயற்சி, தீர்மானம் எனக்குப் பிடித்திருக்கிறது. ரிஷப் பந்த், புஜாராவின் தொடக்கம், விஹாரி, அஸ்வின் பார்ட்னர்ஷிப் அனைத்துமே தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. பிரிஸ்பேன் வரை காத்திருக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

ஐசிசி

ஐசிசி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ராகுல் திராவிட்டுக்குச் சரியான பிறந்த நாள் பரிசு. போராட்டம், பொறுமை, எதிர்ப்பு என அனைத்தையும் இந்திய அணி சிறப்பாக வெளிப்படுத்தியது” எனத் தெரிவித்தார்.

வீரேந்திர சேவாக்

வீரேந்திர சேவாக் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ரிஷப் பந்த்தை ஆட்டமிழக்கச் செய்ய ஸ்மித் அனைத்து முயற்சிகளையும் பயன்படுத்தினார். ஆனால், எந்தப் பலனையும் தரவில்லை. இந்திய அணியை நினைத்துப் பெருமைப்படுகிறேன். வித்தியாசமாக நடத்த வேண்டிய அவசியத்தை ரிஷப் பந்த் காட்டிவிட்டார். விஹாரி, அஸ்வின், புஜாராவின் பேட்டிங் நம்பமுடியாத வகையில் இருந்தது” எனத் தெரிவித்தார்.

மயங்க் அகர்வால்

மயங்க் அகர்வால் இந்தப் போட்டியில் விளையாடாவிட்டாலும் பாராட்டியுள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. சவாலில் இருந்து பின்வாங்கக் கூடாது. இந்திய அணி மிகப்பெரிய போராட்ட குணத்தை வெளிப்படுத்திவிட்டது” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்