கடந்த முறை யு.ஏ.இ.-யில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்க் தொடரில் 3-0 என்று இங்கிலாந்து உதை வாங்கியதற்கு பாகிஸ்தான் ஸ்பின்னர்களே காரணம் என்பதால் இம்முறையும் இங்கிலாந்து பாக். ஸ்பின் பந்து வீச்சு குறித்து கடும் அச்சம் கொண்டுள்ளது.
வரும் செவ்வாயன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா, மற்றும் சுல்பிகர் பாபர் ஆகியோர் குறித்து இங்கிலாந்து கேட்பன் குக் அச்சம் வெளியிட்டுள்ளார்.
2012-ம் ஆண்டு தெஸ்ட் தொடரின் போது நம்பர் 1 டெஸ்ட் அணியாக இங்கிலாந்தை பாகிஸ்தான் 3-0 என்று வீழ்த்தி ஒன்றுமில்லாமல் செய்தது. அந்தத் தொடரில் சயீத் அஜ்மல் 24 விக்கெட்டுகளையும், அப்துல் ரெஹ்மான் 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் அலிஸ்டர் குக் கூறியிருப்பதாவது: “6 அல்லது 7 தொடர்களில் பாகிஸ்தான் இங்கு தோல்வியடையவில்லை என்று கருதுகிறேன். எங்கள் முன்னால் உள்ள சவால் இதன் மூலம் தெரியவருகிறது. உள்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வந்து வெற்றி பெறுவது என்பது மேன்மேலும் கடினமாகிக் கொண்டே வருகிறது.
சயீத் அஜ்மல் இல்லாதது அந்த அணியை பலவீனப்படுத்தப் போவதில்லை, பாகிஸ்தான், இந்தியா, இலங்கையில் ஆடும்போது சுழற்பந்து வீச்சு எப்போதும் ஒரு சவாலே.
யாசிர் ஷா மிகச்சிறப்பான டெஸ்ட் ஆரம்ப கால போட்டிகளை ஆடியுள்ளார். 10 போட்டிகளில் 60 விக்கெட்டுகள் என்றால் சாதாரணமில்லை” என்றார்.
மிஸ்பா உல் ஹக் கூறும்போது, “யாசிர் ஷா எந்த ஒரு அணிக்கும் பெரிய அச்சுறுத்தலே. ஸ்பின் மட்டுமல்ல, எங்கள் வேகப்பந்து வீச்சும் சவாலானதே, மேலும் நாங்கள் ஸ்பின் பந்து வீச்சை ஆடுவதும் இந்தத் தொடரை தீர்மானிக்கும்.” என்றார்.
பாகிஸ்தான் பேட்டிங்கில் யூனிஸ் கான், மிஸ்பா, அசார் அலி, சர்பராஸ் அகமது ஆகியோர் அபாரமான பார்மில் உள்ளனர். 2-வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 22ம் தேதியும், 3-வது, இறுதி டெஸ்ட் போட்டி சார்ஜாவில் நவம்பர் 1-ம் தேதியும் தொடங்குகிறது.
பாகிஸ்தான் அணி: மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), ஷெசாத், ஷான் மசூத், அசார் அலி, ஹபீஸ், பவாத் ஆலம், ஆசாத் ஷபிக், யூனிஸ் கான், ஷோயப் மாலிக், சர்பராஸ் அகமது, யாசிர் ஷா, சுல்பிகர் பாபர், வஹாப் ரியாஸ், இம்ரான் கான், ரஹத் அலி, ஜுனைத் கான்
இங்கிலாந்து அணி: அலிஸ்டர் குக், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், சமித் படேல், ஜானி பேர்ஸ்டோ, இயன் பெல், ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷீத், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டெய்லர், மார்க் உட்
நடுவர்கள்: புரூஸ் ஆக்சன் போர்ட், பால் ரெய்பல் (ஆஸ்திரேலியா)
மேட்ச் ரெஃப்ரி: ஆண்டி பைகிராஃப்ட்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
31 mins ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago