மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கங்குலி

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ம் தேதி லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் கங்குலி முழு உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் கங்குலி ஒரு நாள் ஓய்வுக்கு பின்னர் நேற்று வீடு திரும்பினார்.

முன்னதாக மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது கங்குலி கூறுகையில், “நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே மருத்துவமனைக்கு வருகிறோம். அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. என்னை சிறப்பாக கவனித்துக் கொண்ட உட்லேண்ட்ஸ் மருத்துவமனைக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன்” என்றார்.மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்ற கங்குலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்