ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டி யின் அரையிறுதியில் நடப்பு சாம்பியனான கெய் நிஷிகோரி அதிர்ச்சி தோல்வி கண்டார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் கிழிந்த ஷூவோடு விளையாடிய பிரான்ஸின் பெனாய்ட் பேர் 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் நிஷிகோரியை வீழ்த்தினார்.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றினார் நிஷிகோரி. ஆனால் அடுத்த செட்டில் சுதாரித்துக்கொண்ட பெனாய்ட் பேர் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 2-வது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றிய அவர், அடுத்த செட்டை 6-2 என்ற கணக்கில் வென்றார். கடந்த 4 ஆண்டுகளில் 3-வது முறையாக ஜப்பான் ஓபனில் சாம்பியனாகும் வாய்ப்பை இழந்த நிஷிகோரி ஏமாற்றத்தோடு வெளியேறினார்.
இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை சந்திக்கிறார் பெனாய்ட் பேர். பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான வாவ்ரிங்கா தனது அரையிறுதியில் 6-4, 7-6 (5) என்ற நேர் செட்களில் லக்ஸம்பர்க்கின் ஜில்ஸ் முல்லரை தோற்கடித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago