வரலாற்றிலேயே முதல்முறையாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த நியூஸிலாந்து: இந்தியா, ஆஸிக்கு நெருக்கடி

By பிடிஐ


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசையின் வரலாற்றிலேயே டெஸ்ட் பிரிவில் முதல்முறையாக நியூஸிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதையடுத்து, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்ததோடு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அதிகமான புள்ளிகள் பிரிவில் முதலிடத்தையும் நியூஸிலாந்து பிடித்துள்ளது.

இதன் மூலம் லாட்ர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணிகளுக்கான போட்டியில் நியூஸிலாந்தும் இணைகிறது.

இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூஸிலாந்து அணி 118 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணி 116 புள்ளிகளுடனும், இந்திய அணி 114 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெறும் 6-வது நியூஸிலாந்து அணியாகும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் 7-வது அணி நியூஸிலாந்து. கடந்த 2 ஆண்டுகளாக அதிகபட்சமாக 2-வது இடம் வரை நியூஸிலாந்து முன்னேறியது ஆனால், முதலிடத்தை எட்டமுடியவில்லை.

106 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கஅணி 96 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை முறியடித்து நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் முதலிடத்தைப் பெற்றதும் குறிப்பிடத்தக்து.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தற்போது, ஆஸ்திரேலிய அணி 322 புள்ளிகளுடன், 0.767 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 390 புள்ளிகளுடன் 0.722 சதவீதத்துடன் 2-வது இடத்திலும் உள்ளன. நியூஸிலாந்து அணி 420 புள்ளிகளுடன் 0.70 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளது.

இந்தியா, ஆஸி. அணிகளை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முறியடிக்க இன்னும் 2 சதவீதம் மட்டுேம நியூஸிலாந்துக்கு தேவை என்பதால், இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் அணிகளுக்கு இடையே வரும் நாட்களில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 176 ரன்கள்வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வென்றது. முதல் இன்னிங்கில் பாகிஸ்தான் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன்களுக்கும் டிக்ளேர் செய்தது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 186 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 176 ரன்களில் தோல்வி அடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்