3-வது டெஸ்ட்  போட்டி: ஆஸி. அணியில் இருந்து முக்கிய வேகப்பந்துவீச்சாளர் திடீர் விலகல்

By ஏஎன்ஐ


சிட்னில் வரும் 7-ம் தேதி இந்தியாவுக்கு எதிராகத் தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிலிய அணியில் இருந்து முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்ஸன் விலகியுள்ளார்.

கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் பட்டின்ஸனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதனால், 3-வது போட்டியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓய்வு நாட்களில் வீட்டு வேலை செய்யும்போது, வீ்ட்டில் தவறி விழுந்ததில் பட்டின்ஸனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பட்டின்ஸன் நீக்கப்பட்டுள்ளார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க், ஹேசல்வுட், பாட் கம்மின்ஸ், மைக்கேல் நீஸல், ஷான் அபாட் ஆகியோர் உள்ளனர்.

ஒருவேளை சிட்னி டெஸ்டுக்கு ஜேம்ஸ் பட்டின்ஸன் உடல்நலத்துடன் இருந்தால் அணியில் இடம் பெற்றிருப்பார். ஆனால், காயத்தால் விலகியுள்ளதால், ஷான் அபாட்டுக்கு விளையாடும் 11 வீரர்கள் பட்டியலில் இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது.

பிரிஸ்பேனில் காபாவில் நடக்கும் 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பட்டின்ஸனுக்கு உடல்தகுதி சோதனை நடத்திபின்புதான் அவர் அணியில் சேர்க்கப்படுவார் எனவும் ஆஸி. வாரியம் தெரிவித்துள்ளது.

ஜேம்ஸ் பட்டின்ஸன்

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியஅணிகள் தலா ஒரு ஆட்டத்தில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. இந்நிலையில் வரும் 7-ம் தேதி சிட்னியில் தொடங்கும் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறது.

இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்புக் கிடைக்குமா, ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம், 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து கடும் விமர்சனத்துக்கு ஆஸ்திரேலிய அணி ஆளாகியுள்ளது.

இதனால், 3-வது போட்டியில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என நம்பலாம். 3-வது டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் சேர்க்கப்பட்டிருந்தாலும், தான் முழுமையாக உடல்தகுதி பெறவில்லை என்று வார்னே தெரிவித்துள்ளதால், அவர் விளையாடுவாரா என்பது கடைசிநேர முடிவுக்கு உட்பட்டதுதான்.

ஆஸி. அணி விவரம்:
டிம் பெய்ன்(கேப்டன்),ஷான் அபாட், பாட் கம்மின்ஸ், கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ்,ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், லாபுஷேன், நாதன் லேயான், மைக்கேல் நீஸர், வில் புகோஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்ஷெல் ஸ்டார்க், மிட்ஷெல் ஸ்வீப்ஸன், மாத்யூ வேட், டேவிட் வார்னர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்