கடந்த 10 ஆண்டுகளில் டி20 போட்டிகளில் மகேந்திர சிங் தோனி என்ன செய்தார், ஏதாவது கோப்பையை வென்று கொடுத்தாரா . எதற்காக டி20 அணியில் அவர் பெயர் இடம் பெற்றுள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐசிசி சமீபத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்கள், சிறந்த டி20, டெஸ்ட், ஒருநாள் அணிகளை வெளியிட்டது. இதில் கடந்த 10 ஆண்டுகளி்ல சிறந்த டி20, ஒருநாள் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இந்திய அணயின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, ஐசிசி டி20 அணியில் தோனி சேர்க்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகாஷ் சோப்ரா அவரின் யூடியூப் சேனலில் பேசுகையில், “ கடந்த10 ஆண்டுகளில் தோனி தலைமையில் இந்திய அணி ஏதாவது உலகக் கோப்பையை வென்றுள்ளதா. கடந்த 10 ஆண்டுகளில் தோனி டி20 போட்டிகளில் மெச்சும் அளவுக்கு சிறப்பாக விளையாடியுள்ளாரா. ஏதும் இல்லை.
» புத்தாண்டில் கரோனா விதிமுறை மீறல்?: ஆஸியில் உள்ள இந்திய வீரர்கள் 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
» முஷ்டாக் அலி டி20 கோப்பை: முதல்முறையாக மும்பை சீனியர் அணியில் சச்சின் மகனுக்கு இடம்
ஆனால், ஐசிசி டி20 அணியில் தோனி கேப்டனாகச் சேர்க்கப்பட்டது கண்டு எனக்கு வியப்பாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணிக்கு எந்த கோப்பையையும் தோனி வென்று கொடுக்கவும் இல்லை, டி20 போட்டிகளில் பெரிதாக பேட் செய்யவும் இல்லை அப்படி இருக்கும்போது தோனியின் பெயர் எதற்காகச் சேர்க்கப்பட்டது. . டி20 அணி உருவாக்கும் போது, இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் போன்ற வீரர்களை ஏன் சேர்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை அறிமுகமான முதல் ஆண்டில் தோனி தலைமையில் இந்திய அணிகோப்பையை வென்றது. ஆனால், அதன்பின் நடந்த 2011 முதல் 2016ம் ஆண்டுவரை இந்திய அணி தோனி தலைமையில் சென்று 2-வது சுற்றோடு வெளியேறியது. 2014ம் ஆண்டு இறுதிப்போட்டிவரை சென்ற இந்திய அணி இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது.
டி20 போட்டிகளில் தோனியின் பேட்டிங்கைப் பார்த்தால், இதுவரை 98 போட்டிகளில் விளையாடிய தோனி 1,617 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் மட்டுமே அடங்கும். தோனியின் டி20 ஸ்ட்ரைக் ரேட் 126.13 ஆகும். ஆனால், ஐபிஎல் தொடரில் மட்டுமே ேபட்டிங்கில் ஜொலித்த தோனி, கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணிக்கான டி20 ஆட்டங்களில் பேட்டிங்கில் தடுமாறியது கவனிக்க வேண்டியதாகும்.
ஐசிசி அறிவித்த டி20, டெஸ்ட், மற்றும் ஒருநாள் அணியில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கூட இடம் பெறாதது குறித்து முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் சாடியிருந்தார். அவர் கூறுகையில் " ஐசிசி அறிவித்தது உண்மையான டி20 அணி அல்ல, இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கான அணி" என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago