ஹெராத் அபாரப் பந்துவீச்சு: மே.இ.தீவுகளை இலங்கை இன்னிங்ஸ் வெற்றி

By இரா.முத்துக்குமார்

கால்லேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை.

முதல் இன்னிங்சில் இலங்கை 484 ரன்கள் எடுக்க, மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 251 ரன்களுக்கும், ஃபாலோ ஆனில் 227 ரன்களுக்கும் சுருண்டது. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரங்கனா ஹெராத், 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் 5-வது முறையாக 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

67/2 என்று தொடங்கிய மேற்கிந்திய அணி மேலும் 167 ரன்களையே சேர்க்க முடிந்தது. ஆனால் பிளாக்வுட் ஒரு முனையில் 135 பந்துகளில் 10 பவுண்ட்ரிகள் 3 சிக்சர்களுடன் 92 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு தவிர்க்க முடியாத தோல்வியை கொஞ்சம் தாமதப்படுத்தினார்.

ஆனால் இவர் ஆடிய விதம் அற்புதமானது. நிச்சயம் பிளாக்வுட் மே.இ.தீவுகளுக்கான ஒரு எதிர்கால சிறந்த வீர்ர் என்பதற்கான சுவடுகள் அவரது பேட்டிங்கில் தெரிகிறது.

5 முறை டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹெராத், அதில் காலே மைதானத்தில் மட்டும் 3 முறை இதனை நிகழ்த்தியுள்ளார். தனது வாழ்நாளில் உலகின் அதிக விக்கெட்டுகளுக்கான சாதனையை வைத்துள்ள முத்தையா முரளிதரனே இந்த மைதானத்தில் 4 முறை மட்டுமே 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதாவது 22 முறை ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முரளிதரனால் கால்லேயில் ஹெராத் அளவுக்கு முடியவில்லை என்று தெரிகிறது.

4-,ம் நாளான இன்று தேவேந்திர பிஷூ இலங்கை பந்து வீச்சை வெறுப்பேற்றினார். 10 ரன்களே எடுத்தாலும், அவர் தனது விக்கெட்டை காப்பாற்ற பாடுபட்டார். ஆனால் ஹெராத்தின் ஒரு பந்தில் அவர் கட் ஷாட் அடிக்க முயன்று ஸ்லிப்பில் மேத்யூஸிடம் கேட்ச் கொடுத்து அவுட ஆனார்.

அடுத்த பந்தே மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக மர்லன் சாமுயெல்ஸ், ஹெராத்தின் ஸ்டம்புக்குள் வந்த பந்தை ஆடாமல் விட முடிவெடுக்க பந்து பின் கால்காப்பைத் தாக்கியது. அவுட் ஆனார். ஆனால் அவர் செய்த மிகப்பெரிய தவறு அதனை மேல்முறையீடு செய்ததே. ஒரு பேட்ஸ்மெனுக்கே இத்தகையபந்து ஸ்டம்பை அடிக்கும் என்று நிச்சயம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

நுவான் பிரதீப், டேரன் பிராவோவை சாய்த்தார். அது ஒரு அருமையான பந்து ரவுண்ட் த விக்கெட்டில் ஆஃப் ஸ்டம்ப் திசையில் வீசி சற்றே பந்தை வெளியே எடுக்க சரியான நிலையில் இல்லாத டேரன் பந்தை தடுக்க முயல விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது. ஆனால் முன்னதாக அவர் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்தார். நல்ல தொடக்கம் கண்டு பிரதீப்பின் அருமையான ஒரு பந்தில் வெளியேறினார். 88/5 என்ற நிலையில், ஜேர்மைன் பிளாக்வுட்,. சிரிவதனா, தாரிந்து கவுஷல் ஆகிய ஸ்பின்னர்களை அடிக்கத் தொடங்கினார்.

6-வது விக்கெட்டுக்காக 48 ரன்கள் சேர்த்தாலும் ராம்தின் அதில் 11 ரன்களை மட்டுமே எடுத்து சிரிவதனாவிடம் ஆட்டமிழந்தார். பிளாகுவுட்டுடன் ஜேசன் ஹோல்டர் இணைந்து இருவரும் சேர்ந்து 36 ரன்களைச் சேர்த்தனர்.

இந்நிலையில் ஒரு அசாதாரணமான ரன் அவுட் சூழல் ஏற்பட்டது. மேலேறி வந்து ஹெராத்தை லெக் திசையில் வெளுக்க முயன்றார் ஹோல்டர் பந்த் அவரது கால்காப்பில் பட்டு ஸ்லிப்பில் மேத்யூஸிடம் சென்றது, அவர் ஹோல்டர் கிரீசில் இல்லை என்பதை உணர்ந்து நேரடியாக ஸ்டம்பில் அடிக்க ரன் அவுட் ஆனது.

பிறகு கிமார் ரோச்சை ஹெராத் வீழ்த்த டெய்லர், பிரசாத்திடம் எல்.பி.ஆக கடைசியாக 92 ரன்களில் ஜெர்மைன் பிளாக்வுட் பிரசாத்தை ஆஃப் திசையில் பெரிய ஷாட் ஒன்றை அடிக்க முயன்று 'டீப்'-ல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 68.3 ஓவர்களில் இலங்கை 227 ரன்கள் எடுத்து சுருண்டது. இலங்கை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹெராத் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்