ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்திலும், இந்திய அணி 2-வது இடத்திலும் நீடிக்கின்றன. ஆஸ்திரேலிய அணியைவிட அதிகமான புள்ளிகள் பெற்றும் நியூஸிலாந்து அணி 3-வது இடத்திலேயே நீடிக்கிறது.
மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் 30 புள்ளிகள் பெற்று இந்திய அணி 2-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இந்திய அணி தற்போது 390 புள்ளிகளுடன், 72.2 சதவீத வெற்றிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.
ஆனால், பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிதோல்வி அடைந்தாலும், புள்ளிகள் பட்டியலி்ல 322 புள்ளிகளுடன் இருந்தாலும், வெற்றி சதவீதத்தில் 76.6 சதவீதத்துடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்ற போதிலும் 3-வது இடத்திலேயே நீடிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் நியூஸிலாந்து வென்றதன் மூலம் 60 புள்ளிகள் பெற்றது, ஆனால், வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் 66.7சதவீதத்துடன் இருப்பதால், 3-வது இடத்தையேப் பிடித்துள்ளது.
ஐசிசி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற நியூஸிலாந்து தொடர்ந்து போராடி வருகிறது” எனத் தெரிவி்த்துள்ளது.
இங்கிலாந்து அணி 292 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 166 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் இருக்கின்றன.
ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் 120 புள்ளிகள் தரப்படும். இதில் எத்தனைப் போட்டிகள் ஒரு தொடரில் நடந்தாலும் புள்ளிகள் பகிரப்படும். உதாரணமாக இந்தியா, ஆஸித் தொடரில் 4 ஆட்டங்கள் இருப்பதால், ஒரு போட்டிக்கு 30 புள்ளிகள் வீதம் பகிரப்படும். அடுத்து ஆண்டு நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம்வரை அதிகமான புள்ளிகள், வெற்றி சதவீதம் அதில் முதல் இரு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago