மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பின், அணியில் 3 மாற்றங்களைச் செய்து சிட்னியில் வரும் ஜனவரி 7-ம் தேதி நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளத் தயராகிறது ஆஸ்திரேலிய அணி.
சிட்னியில் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி, வேகப்பந்துவீச்சாளர் ஷான் அபாட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அதேபோல, கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் சொதப்பி வந்த ஜோ பர்ன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர் மீண்டும் பிரிஸ்பேன் ஹீட் அணிக்குச் செல்கிறார்.
» தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்ட பிக்கில் பால் போட்டி
» இந்திய வீரர்கள் எங்களை தவறு செய்ய வைத்தார்கள்: டிம் பெய்ன் பாராட்டு
மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக மோசமான தோல்வியைச் சந்தித்த நிலையில், வேறு வழியின்றி, வார்னரை அணிக்குள் அழைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர் கார்த்திக் தியாகி வீசிய பந்தில் ஹெல்மெட்டில் பந்து தாக்கி கன்கஸனில் வெளியேறிய வில் புகோவ்ஸ்கி அணிக்குள் வந்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர் மாத்யூ வேட் அணியில் இருந்தாலும், சிட்னியில் ஜனவரி 7-ம் தேதி தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னருடன் இணைந்து வில் புகோவ்ஸ்கிதான் ஆட்டத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் டிர்வோர் ஹான்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “ சிட்னியில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டிக்காக ஆஸி. அணியில் டேவிட் வார்னர், ஷான் அபாட், வில் புகோவ்ஸ்கி ஆகியோர் நாளை மாலை அணியில் இணைந்து மெல்போர்னில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
வார்னர் காயத்திலிருந்து விரைந்து குணமடைந்து வருகிறார். சிட்னி டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்குவார். ஷான் அபாட்டும் காயத்திலிருந்து குணமடைந்துவிட்டதால், டெஸ்ட் போட்டியில் களமிறங்கத் தயாராக இருக்கிறார். அணியிலிருந்து ஜோ பர்ன்ஸ் நீக்கப்பட்டு, மீண்டும் பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு அனுப்பப்பட்டுள்ளார்” எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. அணி விவரம்:
டிம் பெய்ன் (கேப்டன்), பாட் கம்மின்ஸ், ஷான் அபாட், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசல்வுட், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், லாபுஷேன், நாதன் லேயான், மைக்கேல் நீஸர், ஜேம்ஸ் பட்டின்ஸன், வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்ஷெல் ஸ்டார்க், மைக்கேல் ஸ்வீப்ஸன், மேத்யூ வேட், டேவிட் வார்னர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago