அடிபட்ட புலியைக் குறைவாக மதிப்பிடாதீர்கள்: இந்தியாவின் வெற்றிக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் புகழாரம்

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, லக்‌ஷ்மண், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முன்னாள், இந்நாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணி வெறும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான தோல்வியைச் சந்தித்தது. கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில், இந்தத் தோல்வியிலிருந்து மீண்டுவந்து தற்போது இந்திய அணி பெற்றிருக்கும் வெற்றியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக பிரபல கிரிக்கெட் வீரர்கள் ட்விட்டரில் தெரிவித்திருக்கும் வாழ்த்துகளின் தொகுப்பு:

சச்சின் டெண்டுல்கர்

விராட், ரோஹித், இஷாந்த், சமி இல்லாமல் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மிகப்பெரிய சாதனை. முதல் போட்டியின் தோல்வியை மறந்து, தொடரை சமன் செய்ய இந்திய அணி காட்டிய அணுகுமுறை, திறன் எனக்கு மிகவும் பிடித்தது. அற்புதமான வெற்றி. இந்திய அணியினருக்கு வாழ்த்துகள்.

விராட் கோலி

என்ன ஒரு வெற்றி இது. ஒட்டுமொத்த அணியின் அட்டகாசமான முயற்சி. அணி வீரர்களுக்கு, குறிப்பாக அணியை வெற்றிக்கு வழி நடத்திய ரஹானேவுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இங்கிருந்து மேலே, முன்னேற்றம்தான்.

வீரேந்திர சேவாக்

மெல்போர்ன் மைதானத்தில் நிஜமாகவே விசேஷமான வெற்றி. சிறப்பான மன உறுதி, அணுகுமுறை. ரஹானே முன் நின்று வழிநடத்தினார். அபாரமான பந்துவீச்சு. கில், திறம்பட ஆடினார்.

விவிஎஸ் லக்‌ஷமண்

அட ! என்ன ஒரு அற்புதமான எழுச்சி. என்ன ஒரு வெற்றி. சிறந்த மன உறுதி மற்றும் அணுகுமுறையைக் காட்டியிருக்கிறார்கள். அணியைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்.

இந்த வெற்றியின் மூலமாக நிறைய நன்மைகள் கிடைத்துள்ளன. ரஹானே அணியைச் சிறப்பாக வழிநடத்தினார் பந்துவீச்சில் விடாப்படியான ஒழுக்கம் இருந்தது. ஆனால், எல்லாவற்றையும் விட மிகப்பெரிய விஷயம், இரண்டு அறிமுக வீரர்களின் ஆட்டம்தான். இருவரும் தன்னம்பிக்கையுடனும், பெரிய வாய்ப்பு கிடைத்ததில் மலைப்பு காட்டாமலும் இருந்தார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் பலமே, ஆட்டத்தில் இடம்பெறாத வீரர்களும் திறமையுடன் இருப்பதே.

வாசிம் ஜாஃபர்

அத்தனை தடைகளையும் மீறி இந்தியா வெற்றி பெற்றுள்ளது

தினேஷ் கார்த்தி

இந்திய அணிக்கு வாழ்த்துகள். அடிபட்ட புலியை என்றுமே குறைவாக மதிப்பிடாதீர்கள்.

இவ்வாறு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்