மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் சாதனையை முறியடித்துள்ளார்.
ஆஸ்திேரலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது
இந்நிலையில் கேப்டன் கோலி, வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இல்லாத நிலையில், மெல்போர்னில் பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸி அணியை 195 ரன்னில் சுருட்டிய இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் ேகப்டன் ரஹானே சதத்தால், 326 ரன்கள் குவித்து 131 ரன்கள் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு இன்று ஆட்டமிழந்தது. இதையடுத்து, இந்திய அணி வெற்றி பெற 70 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆஸிக்கு பதிலடி கொடுத்தது.
இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருக்கின்றன.
இந்தப் போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதில் ஆஸி. வீரர் ஜோஸ் ஹேசல்வுட் விக்கெட்டை அஸ்வின் வீழத்தியபோது, டெஸ்ட் போட்டியில் அதிகமான இடதுகை பேட்ஸ்மேன்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன் இலங்கையின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்தான் டெஸ்ட் போட்டிகளில் 191 இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை அஸ்வின் தற்போது முறியடித்து, 192 இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 375 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிகமான இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில், இங்கிலாந்தின் ஆன்டர்ஸன்(186), கிளென் மெக்ராத்(172), ஷேன் வார்ன்(172), அனில் கும்ப்ளே(167) வீழ்த்தியுள்ளனர்.
இந்திய அளவில் சுழற்பந்துவீச்சில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது வீரர் அஸ்வின்தான். அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் 417 விக்கெட்டுகளையும், அஸ்வின் 375 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்தியப் பந்துவீச்சாளர்கள் அளவில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியதில் 4-வது இடத்தில் அதாவது கபில்தேவ், கும்ப்ளே, ஹர்பஜனுக்கு அடுத்தார்போல் அஸ்வின் உள்ளார்.
2010-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய அஸ்வின், 2011-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அறிமுகமாகினார். இதுவரை உள்நாட்டில் 43 டெஸ்ட் போட்டிகளில் 254 விக்கெட்டுகளையும், வெளிநாடுகளி்ல் 30 டெஸ்ட் போட்டிகளில் 121 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago