ஆஸி.யுடன் நாளை முதல் டெஸ்ட்; விளையாடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிப்பு: சதம் அடித்த வீரருக்கு வாய்ப்பில்லை

By பிடிஐ

அடிலெய்டில் நாளை ஆஸ்திரேலிய அணியுடன் பகலிரவில் பிங்க் பந்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் நிலையில், இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. அடிலெய்டில் நாளை பகலிரவாக, பிங்க் பந்தில் முதல் டெஸ்ட் நடக்கிறது.

இந்த முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே கேப்டன் கோலி விளையாடுவார். அதன்பின், இந்தியா திரும்புகிறார். அடுத்த 3 போட்டிகளுக்கு கோலி விளையாடமாட்டார். அதேசமயம், ரோஹித் சர்மாவும் 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்துதான் இந்திய அணியில் விளையாடுகிறார்.

இந்தச் சூழலில் நாளை முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 11 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இதில் டெஸ்ட் போட்டித் தொடருக்காக எடுக்கப்பட்ட கே.எல்.ராகுல், சுப்மான் கில் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பயிற்சி ஆட்டத்தில் சுப்மான் கில் 43, 65 ரன்கள் சேர்த்துப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், பயிற்சி ஆட்டத்தில் மோசமாக ஆடிய, ஐபிஎல் தொடரிலும் சோபிக்காத பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விளையாடும் 11 வீரர்கள் அணியில் மயங்க் அகர்வாலும் இடம் பெற்றுள்ளார்.

பிரித்வி ஷாவின் பேட்டிங், ஷாட்கள் மோசமாக இருக்கின்றன என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ஆஸி. முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் இருவரும் விமர்சித்திருந்த நிலையில் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சிப் போட்டியில் 73 பந்துகளில் சதம் அடித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சேர்க்கப்படவில்லை. பயிற்சி ஆட்டத்தில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து மோசமாக ஆடிய விருதிமான் சாஹா சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சுக்கு அஸ்வின் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். பேட்ஸ்மேன்களில் பிரித்வி ஷா, அகர்வால், புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, சாஹா ஆகியோர் உள்ளனர்.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சத்தேஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, விருதிமான் சாஹா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரவிச்சந்திர அஸ்வின்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்