ஐபிஎல்: மும்பை பெங்களூர் இன்று மீண்டும் மோதல்

By செய்திப்பிரிவு

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மீண்டும் மோத இருக்கின்றன. மும்பையில் இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுள்ளது. தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்த மும்பை இப்போதுதான் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. தனது 7-வது ஆட்டத்தில் பெங்களூர் அணியை சந்திக்கிறது.

6 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூர் அணி, முதல் இரு ஆட்டங்களில் வென்றது. அதன் பிறகு வரிசையாக 3 போட்டிகளில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. ஹைதராபாத் அணிக்கு எதிராக 6-வது ஆட்டத்தில்கூட பெங்களூர் பேட்டிங் மோசமாகவே தொடங்கியது.

எனினும் டிவில்லியர்ஸ் தனிநபராகப் போராடி 41 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இல்லையென்றால் அப்போட்டியிலும் கூட பெங்களூர் தோல்வியடைந்திருக்கும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டிகள் இரு அணிகளுக்குமே சிறந்ததாக இல்லை. இந்தியா வந்த பிறகு நடைபெற்ற ஆட்டங்களில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. எனவே இந்த வெற்றி தொடர வேண்டும் என்ற முனைப்பிலேயே இரு அணி வீரர்களும் களமிறங்குவார்கள்.

பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடாதது பெங்களூர் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் மும்பை அணியில் மலிங்கா, ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், ஓஜா போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பார்மில் இல்லாத பெங்களூர் பேட்ஸ்மேன்களுக்கு அவர்களால் நிச்சயமாக நெருக்கடி அளிக்க முடியும். போட்டி மும்பையில் நடைபெறுவது மும்பை அணிக்கு கூடுதல் சாதகமாகவுள்ளது. அதே நேரத்தில் மும்பை அணியில் பொல்லார்ட் தவிர மற்ற பேட்ஸ்மேன்களால் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க முடியாதது பெரும் பிரச்சினையாக உள்ளது.

பெங்களூர் அணியில் உள்ளி கெயில், கோலி, டிவில்லியர்ஸ், யுவராஜ் சிங் ஆகியோரில் இருவர் சிறப்பாக விளையாடினால் கூட அந்த அணி வலுவான ஸ்கோரை எட்டிவிடும்.

இப்போட்டியில் ஏற்கெனவே நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் மும்பை அணியால் முதலில் பேட்டிங் செய்து 115 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்