இந்தியாவில் பயணம் மேற்கொண்டு பிப்ரவரி முதல் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இதற்கான முழுமையான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது.
இதில் இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையே நடக்கும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாகவும், மற்ற 3 போட்டிகளில் பகல் ஆட்டமாகவும் நடத்தப்பட உள்ளது.
இதில் பகலிரவு டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மோட்டீரா கிரிக்கெட் மைதானத்தில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது. பகல் ஆட்டமாக நடத்தப்பட உள்ள 4-வது போட்டி மார்ச் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடக்கிறது.
முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் உள்ள ஏம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி 2021, பிப்ரவரி 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையிலும், 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலும் நடக்கிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. இந்த 3 போட்டிகளுமே புனேவில் மார்ச் 23-ம் முதல் 28-ம் தேதிவரை நடக்கின்றன. முதல் ஒருநாள் போட்டி மார்ச் 23-ம் தேதியும், 2-வது ஆட்டம் 26-ம் தேதியும், 3-வது ஆட்டம் 28-ம் தேதியும் நடக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையே 5 டி20 போட்டிகள் நடக்கின்றன. இந்த 5 போட்டிகளுமே அகமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மோட்டீரா மைதானத்தில்தான் நடக்கின்றன. டி20 தொடர் மார்ச் 12-ம் தேதி தொடங்குகிறது.14-ம் தேதி 2-வது ஆட்டமும், 16-ம் தேதி 3-வது போட்டியும் நடக்கிறது. 4-வது ஆட்டம் 18-ம் தேதியும், கடைசி மற்றும் 5-வது ஆட்டம் 20-ம் தேதியும் நடக்க உள்ளது.
இதற்கிடையே பிப்ரவரி 24-ம் தேதி இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டியும், பிங்க் பந்தில் விளையாட்டும் போட்டியும் அகமதாபாத் அரங்கில்தான் நடக்கிறது. மற்றொரு டெஸ்ட் போட்டியும் இந்த மைதானத்தில்தான் நடக்கிறது.
கரோனா வைரஸ் பரவலையடுத்து இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டிகள் அனைத்தையும் மூன்று இடங்களில் மட்டுமே நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதனால்தான் அகமதாபாத், சென்னை, புனே ஆகிய 3 நகரங்கள் மட்டுமே போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago