விதிமுறையெல்லாம் 10 வீரர்களுக்கு மட்டும்தானா உங்களுக்கு பொருந்தாதா? ஸ்ரேயாஸை ஏன் களமிறக்கவில்லை? கோலியை விளாசிய சேவாக்

By செய்திப்பிரிவு

விதிமுறையெல்லாம் இந்தியஅணியில் உள்ள 10 வீரர்களுக்கு மட்டும்தானா, கேப்டன் கோலிக்கு எந்த விதியும் பொருந்தாதா என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் விளாசியுள்ளார்.

ஆஸ்திேரலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றாலும் அணியில் முக்கிய வீரர்களான ஸ்ரேயாஸ் அய்யர், யஜுவேந்திர சாஹல் ஆகியோர் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இல்லை.

ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டபின்புதான் கன்கஸனில் சாஹல் பந்துவீச வந்தார். இல்லாவிட்டால் சாஹலுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. ஏற்கெனவே ஒரு கீப்பர் கே.எல்.ராகுல் இருக்கும் போது, சாம்ஸனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, மணிஷ் பாண்டேவும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அருமையான ஃபார்மில் இருக்கும் ஜடேஜா 7-வது வீரராகவே களமிறக்கப்பட்டார்.

இதுபோன்ற பல்வேறு குளறுபடிகளுடன் கேப்டன் கோலி அணி வீரர்களைத் தேர்வு செய்துள்ளதை முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சோனி ஸ்போர்ட்ஸ் சேனலிலுக்கு சேவாக் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து 4-வது இடத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். ஆனால், அவரைநேற்று நடந்த டி20 போட்டியில் அமர வைத்துள்ளார் கோலி. ஸ்ரேயாஸ் அய்யரின் பேட்டிங்கை பற்றிப் பேசினால், கடந்த காலங்களில் டி20 போட்டிகளி்ல் சிறப்பாகவே பேட்டிங் செய்துள்ளார்.

அப்படியிருக்கும் போது எந்த அடிப்படையில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஸ்ரேயாஸ் அய்யரை அமர வைக்க ஏதேனும் காரணம் இருக்கிறதா. எனக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று கோலியிடம் நேரடியாகச் சென்று கேட்கும் அளவுக்கு ஸ்ரேயாஸ் அய்யருக்கு கூட துணிச்சல் இருக்கும் என நான் நினைக்கவில்லை.

நான் ஒன்றுமட்டும் சொல்கிறேன். விதிமுறை என்றால் அது அனைவருக்கும் ஒன்றுபோல் இருக்க வேண்டும். ஆனால், அணியில் 10 வீரர்களுக்கு மட்டும்தான் விதிமுறை, கேப்டன் கோலிக்கு இல்லையா. எந்த விதிமுறையும் கோலிக்கு பொருந்தாதா.

பேட்டிங் வரிசையிலும் கோலி தன்னுடைய இடத்தை மாற்றிக்கொள்ளமாட்டார், தான் மோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்தால்கூட யாருக்கும் தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்கமாட்டார், சிறிய இடைவெளி கூட கொடுக்கமாட்டார் என கோலி இருப்பது தவறானது

. கன்கஸன் விதியைப் பொருத்தவரை ஜடேஜாவுக்கு பதிலாக சாஹலை தேர்வு செய்து இந்திய அணி விளையாட வைத்தது சரியானதுதான். ஜடேஜாவால் விளையாட முடியாத சூழலில்தான் சாஹல் விளையாடினார். இது இந்திய அணிக்கு கிடைத்த வாய்ப்பு. தலையில் பந்து தாக்கும்போது, அந்த வீரரால் விளையாட முடியாத சூழலில்தான் கன்கஸனை தேர்வு செய்தோம்.

ஜடேஜாவுக்கு பந்து தாக்கியதற்கான அறிகுறிகள், வலி போன்றவே தெரிய சிறிதுநேரம் ஆனது. அதானால்தான் ஓய்வறைக்குச் சென்று கன்கஸனைத் தேர்வு செய்தார்.ஆதலால், கன்கஸன் வாய்ப்பை இந்திய அணி தவறாகத் தேர்வு செய்தது என குறைகூறமுடியாது.

இதற்கு முன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு தலையில் காயம் ஏற்பட்டபோது, கன்கஸனில் லாபுஷேன் விளையாடினார், ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணியும் இதற்கு முன்பலன் அனுபவித்துள்ளது. ஆதலால் ஆஸி. அணி இதில் இந்திய அணியை புகார் கூறக்கூடாது.

தலையில் அடிபட்டநிலையிலும் ஜடேஜா பேட்டிங் செய்தாரே என்று ஆஸி. வீரர்கள் வாதிடலாம். ஆனால், ஜடேஜா ஓய்வு அறைக்குச் சென்றபின், அவரின் தலையில் காயம் வீங்கி இருக்கலாம், தலைசுற்றல் ஏற்பட்டிருக்கலாம். இதற்கான வாய்ப்பு இருக்கிறதே.

எனக்குகூட ஹெல்மெட்டில் பலமுறை பந்துதாக்கியுள்ளது. அப்போது நானும் வலியை உணர்ந்திருக்கிறேன். அப்போதெல்லாம் இந்த விதிகள் இல்லை

இ்வ்வாறு சேவாக் தெரிவி்த்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்