தொடர்ச்சியான தோல்விகளால் முற்றுகிறது நெருக்கடி: வெற்றியை தாரை வார்க்கும் தோனி

By பெ.மாரிமுத்து

இந்திய அணி கிரிக்கெட் அணியை கடந்த சில ஆண்டுகளாக புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற கேப்டன் தோனிக்கு தற்போது போதாத காலம். 34 வயதான தோனி கடந்த 2004 டிசம்பர் 1ம் தேதி சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அதிர டியால் புகழ்பெற்ற அவர் 2007ல் டி20 உலககோப்பையின் இந்திய அணிக்கு கேப்டன் ஆனார். முதல் தொடரிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தார்.

2007 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருநாள் போட்டிக்கு கேப்டன் ஆனார் தோனி. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தார். இதற்கிடையே கும்ப்ளேயின் ஓய்வை தொடர்ந்து 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் டெஸ்டு அணிக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய அணி வெளிநாட்டு தொடர்களில் சிறப் பாக ஆடி வெற்றிகளை சேர்த்தது. ஆனால் இந்த வெற்றியானது 2011 உலககோப்பையை வென்ற பின்னர் தலைகீழாக மாறியது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் பலத்த அடி கிடைத்தது.

மாறாக ஒருநாள் போட்டிகளில் சீரான வெற்றிகளை குவித்தது. சாம்பியன் டிராபியையும் வென்றது. டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்ததால் தோனிக்கு நெருக்கடி ஏற்பட்டது. டெஸ்ட் போட்டி களில் தோனி விருப்பம் இல்லாமல் ஆடுகிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ஆஸி. சுற்றுப்பயணத்தில் 3வது போட்டியின் போது தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் கோலி தலை மையில் இந்திய அணி கடைசி டெஸ்ட்டை எதிர்கொண்டது.

அதன்பின்னர் ஒருநாள் போட்டி மற்றும் டி20க்கு கேப்டனாக தோனி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கேப்டன் பதவியேற்ற பின்னர் தோனி 6வது இடத்திலேயே களமிறங்கி வரு கிறார். பல்வேறு போட்டிகளில் கடைசி வரை நிலைத்து நின்று ஆடி இந்திய அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத் துள்ளார். இதனால் அவருக்கு ‘கிரேட் பினிஷர்'(ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைப்பவர்), சிறந்த மேட்ச் வின்னர் என்ற பெயரும் கூட உண்டு.

2011 உலககோப்பை பைனலில் சிக்சர் அடித்து ஆட்டத்தை வெற்றி யுடன் தோனி முடித்ததை இன்னும் யாராலும் மறக்க முடியாது. அதே போல் உலககோப்பைக்கு பிறகு மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி பைனலிலும் தோனி சிறப்பாக ஆடி கோப்பையை வெல்ல உதவினார். ஆனால் சமீபகாலமாக தோனியின் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. தற்போது 4வது இடத்தில் களமிறங்கி ஆடி வரும் தோனி சொல்லும்படியான ரன்களை குவிக்கவில்லை.

வங்காளதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கடந்த ஜூன் மாதம் முதல் முறையாக தொடரை இழந்ததால் தோனி நெருக்கடிக்கு உள்ளானார். தற் போது தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரை இழந்ததோடு கான்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் தோல்வி கண்டுள்ளது. ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் வல்லவரான தோனி சமீபகாலமாக தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் தோனியால் அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. கடைசி கட்டத்தில் தோனி களத்தில் நிற்கும் போது 3 ஓவர்களுக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. 48வது ஓவரை அனுபம் இல்லாத ரபாடா வீசினார்.

இந்த ஓவரில் ஒன்று, இரண்டு ரன்களாகவே தோனி ஓடி ஓடி சேர்த்தார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட போதும் ரபாடாவே பந்தை கையில் எடுத்தார். தோனியின் உடலை குறிவைத்து பந்து வீசினார். அதை சரியாக கணிக்காமல் தோனி ஆடியதால் விக்கெட்டை பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நிலைமை இந்திய அணியின் தோல்வி தவிர்க்க முடியாததாகி விட்டது.

மேலும் தோனி நேற்றைய ஆட்டத்தில் 30 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 31 ரன்கள் மட்டுமே சேர்த்தார். வெற் றியை அடைய வாய்ப்பு இருந்த நிலை யிலும் கடைசி வரை தோனி ரொம்ப பொறுமையாக ஆடிவிட்டார். 30 பந்து களை சந்தித்த அவர் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். அதுவும் 49வது ஓவரில் தான். ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் தோனி நீடிக்க ஏற்கெனவே முன்னாள் வீரர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தால் தோனியின் நிலை மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும். பொதுவாக எல்லா கிரிக்கெட் வீரர் களுக்கும் நெருக்கடியான தருணங்கள் அவர்களது கிரிக்கெட் வாழ்வில் கட்டாயமாக இருக்கும். அந்த கட்டத் தில் தான் தற்போது தோனி உள்ளார். இதில் இருந்து அவர் மீண்டு வருவாரா? என்பதை அடுத்து வரும் ஒருசில போட்டிகள் தீர்மானிப்பதாக இருக்கும்.

விரும்பிய முடிவு கிடைக்காது

கான்பூர் ஒருநாள் போட்டியின் முடிவு தொடர்பாக தோனி கூறும்போது, ‘பின்வரிசையில் விளையாடும் போது நிறைய விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கும். நீங்கள் நிறைய ஆட்டங்களில் கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடி தந்திருப்பீர்கள். ஆனால் அதை விட வெற்றி தேடித்தர தவறிய ஆட்டங்களைத்தான் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது என்பது ஒரு சூதாட்டம் போன்றது. சில நேரம் பலன் கிடைக்கும். சில நேரம் விரும்பிய முடிவு கிடைக்காது. ஆனால் அணியில் அது தான் எனது வேலை. இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான ஆட்டங்களில் இது போன்று அணியின் வெற்றிக்கு கடைசி நேரத்தில் என்னால் உதவ முடியாமல் போனது நினைவில் இருக்கிறது’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்