தனது மகன் பிறப்புக்கு விடுமுறை கேட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சுனில் கவாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது ஆஸ்திரேலிய நாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் ஒரு நாள் தொடரும், பிறகு டி20 தொடரும் நடைபெறுகின்றன. கடைசியாக டெஸ்ட் தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டிக்குப் பிறகு அணியின் தலைவர் விராட் கோலி, தனக்குக் குழந்தை பிறக்கவுள்ளதால் அந்த நேரத்தில் மனைவியுடன் இருக்க நாடு திரும்புகிறார்.
கோலியின் இந்த முடிவுக்கு ஆதரவும், விமர்சனங்களும் எழுந்தன. 1975-76இல் நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கருக்கு குழந்தை பிறந்ததாகவும், ஆனால் அவர் அதைக் காரணமாகக் காட்டி சுற்றுப்பயணத்துக்கு நடுவில் நாடு திரும்பவில்லை என்றும் கபில்தேவ் கூறியிருந்தார்.
இன்னொரு பக்கம் சுனில் கவாஸ்கர் விடுமுறை கோரியதாகவும், ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
"முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறேன். நான் குழந்தை பிறக்கும்போது மனைவியுடன் இருக்க வேண்டும் என்று விடுமுறை கேட்கவே இல்லை. சுற்றுப் பயணத்துக்குக் கிளம்பும்போதே, நான் அருகில் இல்லாத நேரத்தில்தான் குழந்தை பிறக்கப் போகிறது என்பது எனக்குத் தெரியும். நான் இந்திய நாட்டுக்காக விளையாடப் போனேன். அதனால் என் மனைவி எனக்கு முழு ஆதரவு கொடுத்தார். நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது எனக்குக் காயம் ஏற்பட்டது.
மருத்துவர்கள் என்னை 4 வாரங்கள் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். அடுத்த டெஸ்ட் மேட்ச் மேற்கிந்தியத் தீவுகளில் 3 வாரங்களுக்குப் பிறகுதான் இருந்தது. எப்படியும் இந்தக் காலகட்டத்தில் நான் விளையாட முடியாது என்பதால் இந்தச் சமயத்தில், எனது சொந்தச் செலவில் நான் குழந்தையைப் பார்த்துவிட்டு மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டிக்கு முன் திரும்பி விடுவதாக அனுமதி கோரினேன். எனவே, நான் விளையாடாமல் போக காயம் மட்டுமே காரணமாக இருந்தது. வேறெதுவும் இல்லை. ஏன், மருத்துவர்கள் என்னைக் கூடுதலாக ஒரு வாரம் ஓய்வெடுக்கச் சொன்னபோதும் நான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினேன்" என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 mins ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago