2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்த 2011 உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் இன்னமும் தான் உற்சாகமாக கிரிக்கெட் ஆடுவதற்கு சச்சின் டெண்டுல்கர் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மும்பைக்கு எதிரான பஞ்சாப் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டுக்காக மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த யுவராஜ் சிங் தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு தெரிவிக்கும் போது, “விளையாட வேண்டும், ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும் என்பதற்காக விளையாடி வருகிறேன்.
இந்திய அணிக்காக மீண்டும் ஆட வாய்ப்பு கிடைக்கும் என்ற இலக்குடன் ஆடிவருகிறேன். இந்த ரஞ்சி போட்டிகள் எனக்கு அந்த வாய்ப்புகளை அளித்துள்ளன. கடந்த 6 வாரங்களாக நல்ல உடற்பயிற்சி, கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். எனவே என்னால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறேன்.
கடந்த ஆண்டு சச்சினிடம் பேசிக் கொண்டிருந்த போது, இந்தியாவுக்காக விளையாடுவது மிக முக்கியமானதே ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆட மறந்து விடாதே என்று அறிவுரை வழங்கினார். எனவே இந்தியாவுக்கு விளையாடப்போகிறோம் என்பது எங்களுக்கு சிறு வயதில் தெரியாது, கிரிக்கெட் ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடவே பழகினோம். எனவே நான் கிரிக்கெட் ஆட்டத்தை பிடித்து, மகிழ்வுடன் ஆடும் வரை தொடர்வேன்” என்றார்.
கடந்த ரஞ்சி சீசனில் 7 போட்டிகளில் 671 ரன்களை 55.91 என்ற சராசரியின் கீழ் எடுத்த யுவராஜ் சிங் வயது தற்போது 33.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago