ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கேரளா –  ஏடிகே மோகன் பகான் மோதல்

By செய்திப்பிரிவு

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7-வது சீசன் கோவாவில் இன்று தொடங்குகிறது.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இம்முறை கோவாவில் உள்ள ஜிஎம்சி, திலக் மைதான், பதோர்தா ஆகிய 3
மைதானங்களில் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற உள்ளன. இன்று தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 21 வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 115 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இம்முறை 11 அணிகள் களமிறங்குகின்றன. புதிதாக எஸ்சி கிழக்கு பெங்கால் அணி சேர்க்கப்பட்டுள்ளது.

நடப்பு சாம்பியனான அத்லெடிக் டி கொல்கத்தா அணி, ஐ லீக் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணியுடன் இணைக்கப்பட்டு ஏடிகே மோகன் பகான் என்ற பெயருடன் களமிறங்குகிறது. தொடக்க நாளான இன்று இரவு கோவாவின் பம்போலியத்தில் உள்ள ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதுகின்றன. இரு முறை இறுதிப் போட்டியில் கால் பதித்த கேரள அணி கடந்த 3 சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை.

கேரள அணியில், இம்முறை ஸ்பெயினைச் சேர்ந்த கிபு விகுனா பயிற்சியாளராக உள்ளார். கொச்சியை சேர்ந்த 6 வீரர்களும், 7 வெளி
நாட்டு வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இம்முறை இங்கிலாந்தைச் சேர்ந்த கேரி கூப்பர், தெற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோ நாட்டைச் சேர்ந்த டிபன்டர் பேக்கரி
கோன், ஸ்பெயினின் வின்சென்ட் கோமஸ் ஆகியோருடன் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ள ஜிம்பாப்வேயின் கோஸ்டா நமோயினுசு, ஜெசெல் கார்னிரோ, செர்ஜியோ சிடோஞ்சா ஆகியோரும் பலம் சேர்க்கக் கூடும்.

ஏடிகே மோகன் பகான் அணி கடந்த சீசனில் ஏடிகே அணியாக விளையாடிய போது லீக் சுற்றின் இரு ஆட்டங்களிலும் கேரளாவிடம் தோல்வி கண்டிருந்தது. இந்த தோல்விக்கு இம்முறை பதிலடி கொடுக்க முயற்சி செய்யக் கூடும் ஏடிகே மோகன் பகான் அணி.
இருமுறை சாம்பியனான சென்னையின் எப்சி தனது முதல் ஆட்டத்தில் வரும் 24-ம் தேதி ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டம்

நேரம்: இரவு 7.30
நேரலை:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்