இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையே இந்தூரில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரை சமன் செய்துள்ளது. ஆட்டநாயகான கேப்டன் தோனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா நிர்ணயித்த 247 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்ட முடியாமல் தென் ஆப்பிரிக்கா 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ப்ளெஸ்ஸி 51 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கில் முதலில் களமிறங்கிய ஆம்லா, டி காக் ஜோடி தங்களது வழக்கமான பாணியுடன் விரட்டலை துவங்கியது. ஒரு ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாகவே தேவையாயிருந்த நிலையில் 6 ஓவர்களில் 36 ரன்களை அந்த அணி எடுத்தது.
களத்தின் தன்மையை அறிந்த தோனி, 6-வது ஓவரிலேயே ஹர்பஜன் சிங்கை பந்து வீச அழைத்தார். அடுத்து வீசிய அக்சர் படேல், தனது முதல் ஓவரிலேயே ஆம்லாவை வெளியேற்றினார். தொடர்ந்து 10-வது ஓவரில் ஹர்ப்ஜன் சிங் டி காக் விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் களத்தில் இணைந்த ப்ளெஸ்ஸி - டுமினி ஜோடி ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த இணையால் 23 ஓவர்களில் 131 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேர்த்தது. அப்போது ஒரு ஓவருக்கு சராசரி தேவை 4 ரன்கள் மட்டுமே. எப்படியும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று விடும் என்ற நிலையில் மீண்டும் பந்துவீச வந்த அக்சர் படேல் டுமினி விக்கெட்டையும், ப்ளெஸ்ஸி விக்கெட்டையும் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி இந்த அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார்.
அடுத்து ஆட வந்த மில்லர் புவனேஸ்வர் குமார் வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். வேகமாக 142 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா இழந்தது. இருந்தும், தேவைய சராசரி ரன்கள் குறைவாகவே இருந்ததால் பெஹார்டியன், டி வில்லியர்ஸ் ஜோடி அணியை கரை சேர்த்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது.
அப்போது மொஹித் சர்மாவை பந்து வீச அழைத்த தோனிக்கு கை மேல் பலன் கிடைத்தது. டி வில்லியர்ஸ் அந்த ஓவரின் முதல் பந்திலேயே கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆட முயற்சித்து பெவிலிய திரும்ப 7 ஓவர்களில் 27 ரன்கள் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு தென் ஆப்பிரிக்கா சென்றது.
கை வசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருக்க 44-வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார், தாஹிர், மார்கல் இருவரையும் ஆட்டமிழக்க வைத்தார். இதனால் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பேட்டிங் சொதப்பிய போதும், தோனி தனியாளாக நின்று அணியை சரிவிலிருந்து மீட்டார். இந்திய அணியின் பந்துவீச்சாளர்களும் தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி தந்து, அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் அக்சர் படேல் 10 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 8.4 ஓவர்களில் 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
1-1 என்ற நிலையில் சமனில் உள்ள இந்த கிரிக்கெட் தொடரின் அடுத்த போட்டி ராஜ்கோட்டில் அக்டோபர் 18 அன்று நடக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago