நியூஸிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மே.இ.தீவுகள் அணி கரோனா தனிமைப்படுத்தும் விதிமுறைகளை மீறியதையடுத்து, அவர்களின் பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, மே.இ.தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் நியூஸிலாந்து அரசிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
நியூஸிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மே.இ.தீவுகள் அணி 3 டி20 தொடர், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நவம்பர் 27-ம் தேதி டி20 தொடரும், டிசம்பர் 3-ம் தேதி டெஸ்ட் தொடரும் நடக்கிறது.
இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி நியூஸிலாந்து சென்றுள்ளது. நியூஸிலாந்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை முடிந்தபின்புதான் அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் மே.இ.தீவுகள் அணி வீரர்களுக்கும் 15 நாட்கள் தனிமை கட்டாயமாக்கப்பட்டு, தனி ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். இதில் விளையாட்டு வீரர்கள் என்பதால், பயிற்சிக்கு மட்டும் வீரர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடுவதற்கு நியூஸிலாந்து சுகாதாரத்துறை விதிவிலக்கு அளித்தது.
ஆனால், இந்த விதிவிலக்கைத் தவறாகப் பயன்படுத்திய மே.இ.தீவுகள் வீரர்கள் சிலர், தனிமைப்படுத்தும் விதிகளை மீறி வெளியே சென்றனர். சிலர் உணவுகளைப் பகிர்ந்து கொண்டர்.
இந்த விவரம் அறிந்தவுடன், நியூஸிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மே.இ.தீவுகள் அணிக்கு அளித்திருந்த சிறப்பு உரிமையான பயிற்சிக்கு மட்டும் கூடுதவதையும் ரத்து செய்து யாரும் பயிற்சி செய்யத் தடைவிதித்தனர். வீரர்கள் அனைவரும் கண்டிப்பாக அறையை விட்டு வெளியேவரக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து, மே.இ.தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தங்களின் தவறை உணர்ந்து, நியூஸிலாந்து அரசிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். இதுகுறித்து பில் சிம்மன்ஸ் ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “நியூஸிலாந்து அரசிடமும், மக்களிடமும் நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். எங்களை இங்கு அனுமதித்தபின் நாங்கள் விதிமுறைகளை மீறியிருக்கிறோம்.
நாங்கள் செய்த செயல் எங்களை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. எங்கள் அணிக்குள் வீரர்களுக்கு நாங்கள் கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். நாங்கள் வந்தபின் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது.
20-ம் தேதி நடக்கும் முதல் பயிற்சி ஆட்டத்துக்காக குயின்ஸ்லாந்துக்குச் செல்ல இருக்கிறோம். ஆனால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடாமல் பயிற்சி எடுக்காமல் இருந்தால் எங்களால் பிரதான போட்டிகளில் விளையாட முடியாது. ஆதலால் எங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago