இந்தியாவுக்கு எதிரான ஆஸி. டெஸ்ட் அணி அறிவிப்பு: 2 வேகப்பந்துவீச்சாளர்கள் உள்பட 5 இளம் வீரர்கள் சேர்ப்பு

By ஏஎன்ஐ

இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள 17 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பேட்ஸ்மேன் வில் புக்கோவ்ஸ், வேகப்பந்துவீச்சாளர்கள் கேமரூன் க்ரீன், சீன் அபாட் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களும், குயின்ஸ்லாந்து லெக் ஸ்பின்னர் மிட்ஷெல் ஸ்வீப்ஸன் உள்ளிட்டோர் அறிமுகமாகின்றனர்.

இந்திய அணி 2 மாதத்துக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி துபாயிலிருந்து நேற்று புறப்பட்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது. சிட்னியில் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பின் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

வரும் 27-ம் தேதி டி20 தொடரும், அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் டிசம்பர் 8-ம் தேதிவரை நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் டிசம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது.

இந்தப் போட்டி முடிந்தபின், கேப்டன் கோலி இந்தியா புறப்பட்டுவிடுவார். அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாடமாட்டார். அவருக்குப் பதிலாக டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி இன்னும் அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 17 வீரர்கள் கொண்ட அணியை டெஸ்ட் தொடருக்கு இன்று அறிவித்துள்ளது.

இதில் ஷெப்பீல்ட் சீரிஸ் தொடரில் அதிரடியாக ஆடி சூப்பர் ஃபார்மில் இருக்கும் 22 வயதான வில் புக்கோவ்ஸ் அறிமுகமாகிறார். வேகப்பந்துவீச்சாளர் சீன் அபாட், மைக்கேல் நீஸர், ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன், குயின்ஸ்லாந்து லெக் ஸ்பின்னர் மிட்ஷெல் ஸ்வீப்ஸன் ஆகியோர் அறிமுகமாகின்றனர்.

வில் புகோவ்ஸ்

இதில் தொடக்க ஆட்டக்காரர் வில் புகோவ்ஸ் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாக வேண்டியவர், ஆனால், கடைசி நேரத்தில் வாய்ப்பை இழந்தார். ஆனால், ஷெப்பீல்ட் சீரிஸில் சிறப்பாக ஆடி 495 ரன்கள் குவித்ததையடுத்து, தேர்வுக்குழுவினரின் கவனத்தை புக்கோவ்ஸ் ஈர்த்தார்.

இதையடுத்து, இந்தியாவுக்கான டெஸ்ட் தொடரில் புக்கோவ்ஸ் அறிமுகமாகிறார். ஆஸ்திரேலிய அணியில் ஏற்கெனவே வேகப்பந்துவீச்சாளர்களான பட்டின்ஸன், மிட்ஷெல் ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் இருக்கும் நிலையில் கூடுதலாக சீன் அபாட், மைக்கேல் நீசர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுழற்பந்துவீச்சுக்கு நேதன் லியோன் இருக்கும் நிலையில் அவருடன் குயின்ஸ்லாந்து லெக் ஸ்பின்னர் மிட்ஷெல் ஸ்வீப்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார்.

தேர்வுக்குழுத் தலைவர் ட்ரீவர் ஹான்ஸ் கூறுகையில், “ஆஸ்திரேலியாவில் நடந்த ஷெப்பீல்ட் ஷீல்ட் சீரிஸில் பல வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். முதல்கட்டச் சுற்றிலேயே பல வீரர்களின் செயல்பாடு மனநிறைவாக இருந்தது. இதிலிருந்து கேமரூன் க்ரீன், வில் புகோவ்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி விவரம்:

சீன் அபாட், ஜோ பர்ன்ஸ், பாட் கம்மின்ஸ், கேமரூன் க்ரீன், ஜோஸ் ஹேசல்வுட், ட்ரீவிஸ் ஹெட், மமஸ் லாபுஷேன், நேதன் லியோன், மைக்கேல் நீஸர், டிம் பெய்ன், ஜேம்ஸ் பட்டின்ஸன், வில் புக்கோவ்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்ஷெல் ஸ்டார்க், மிட்ஷெல் ஸ்வீப்ஸன், மாத்யூ வேட், டேவிட் வார்னர்.

இந்திய ஏ அணியுடன் விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சீன் அபாட், ஆஸ்டன் அகர், டிம் பெய், ஜோ பர்ன்ஸ், ஜேக்ஸன் பேர்ட், அலெக்ஸ் கேரே, ஹேரி கான்வே, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ட்ராவிஸ், ஹெட், மோய்ஸென்ஸ் ஹென்ரிக்ஸ், நிக் மேடிஸன், மிட்ஷெல் மார்ஷ், மைக்கேல் நீஸர், ஜேம்ஸ் பட்டின்ஸ்,வில் புக்கோவ்ஸ், மார்க் ஸ்டீக்கட்டி, வில் சதர்லாந்த், மிட்ஷெல் ஸ்வீப்ஸன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்