இதுதான் என் பேட்டிங் வரிசை இந்த இடத்தில்தான் நான் களமிறங்குவேன் என்ற ஒரு விறைப்பான, வளைந்து கொடுக்காத தன்மையுடன் இந்திய அணியின் பேட்டிங் வரிசை இருப்பதாக தோனி அங்கலாய்த்துள்ளார்.
ரஹானே 3-ம் நிலையில் களமிறங்கி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நன்றாக ஆடிவந்தார், இந்நிலையில் மீண்டும் விராட் கோலி நேற்று ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் களமிறக்கப்பட்டார். அணியின் பேட்டிங் வரிசையில் குறிப்பாக 3-ம் நிலையில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாமல் போயுள்ளது.
விராட் கோலி உலகக் கோப்பை பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு நேற்றுதான் அரைசதம் கடந்தார், அதுவும் தான் அரைசதம் கடக்க வேண்டும் என்ற கவனம் இருந்ததே தவிர இந்திய அணியை வெற்றி பெறச் செய்யுமாறு ஆடவேண்டும் என்ற கவனம் ஆதிக்கம் செலுத்தியதாகத் தெரியவில்லை. இவர் நினைத்த இடத்திலிருந்து அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல தென் ஆப்பிரிக்கா என்ன தற்போதைய மேற்கிந்திய தீவுகளா? என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் இவர் தனது 3-ம் நிலைதான் தனக்கு வேண்டும் என்று நிர்பந்தப் படுத்தியிருக்கலாம்.
இந்நிலையில் தோனி கூறியிருப்பதாவது:
"நான் பேட்டிங்கில் சற்று முன்னால் களமிறங்க வேண்டும். அதே வேளையில் பின்வரிசையில் இறங்குபவர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். எனவே நான் கலந்துகட்டி ஏதாவது செய்து, பொருத்திப் பார்த்து டவுன் ஆர்டரை முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக நல்லது என்னவெனில் நான் அதிக ஓவர்கள் ஆடினால்தான், பார்ட்னர்ஷிப்களை உருவாக்கி பிற்பாடு பெரிய ஷாட்களை ஆட முடியும்.
இந்த அணிவரிசையின் பின்னால் இருக்கும் சிந்தனை இதுவே, ஆனால் மற்ற சில பேட்ஸ்மென்களும் இதற்கு ஏற்ப தங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் சில வேளைகளில் ரன்கள் எடுக்கலாம், சில வேளைகளில் எடுக்காமல் இருக்கலாம். ஆனால் பின்வரிசையில் இறங்கி ஆடும் அனுபவத்தை அவர்கள் பெறுவதே முக்கியம்.
மேலும், இந்திய பேட்டிங் வரிசை வளைந்து கொடுக்காத தன்மையில் சிக்கியுள்ளதாக நான் நினைக்கிறேன். 'இதுதான் எனது பேட்டிங் ஆர்டர், இதில்தான் நான் களமிறங்குவேன்' என்ற விறைப்பு உள்ளது. ஆனால் சில வேளைகளில் பின்னால் களமிறங்க வேண்டும், அப்போதுதான் கஷ்டங்கள் புரியும். அதற்காக முன்னால் களமிறங்கி ஆடுவது எளிது என்று கூறவில்லை. ஆனால் முன்னால் களமிறங்கும்போது உங்கள் பின்னால் 3, 4 பேட்ஸ்மென்கள் இருக்கிறார்கள் என்ற சவுகரியம் உள்ளது, அதனால் பெரிய ஷாட்களை ஆடிக்கொள்ளலாம் என்று நினைக்கலாம். ஆனால் 5, 6,7-ம் நிலைகளில் இறங்கினால் பெரிய ஷாட்களை உடனடியாக ஆட வேண்டும்.
அதற்கு உங்களுக்கு நீங்களே நம்பிக்கை அளித்துக் கொள்ள வேண்டும், 'ஆம், நாம் இந்த ஷாட்டை தவறாக ஆட முடியாது' என்ற உறுதி அவசியம். பின்னால் களமிறங்கினால் இத்தகைய நெருக்கடிகளை ஒருவர் சந்தித்துதான் ஆகவேண்டும். விஷயம் ஒன்றுமில்லை, நான் முன்வரிசையில் களமிறங்க வேண்டுமெனில் யாராவது ஒருவர் பின்னால் இறங்கித்தான் ஆக வேண்டும். ஊடகத் தரப்பை எடுத்துக் கொண்டால் நிறைய குழப்பங்கள் உள்ளன. அவர்கள் நான் 4-ம் நிலையில் களமிறங்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் விராட் கோலியும் 3-,ம் நிலையில் களமிறங்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதேவேளையில் அஜ்ங்கிய ரஹானேயும் 4-ம் நிலையில் ஆட வேண்டும் என்கிறார்கள்.
இது சாத்தியமேயல்ல. இருப்பது 2 இடங்கள் அதற்கு 3 பேட்ஸ்மென்கள்!
எப்போதுமே கேள்வி என்பது இருக்கிறது. நான் விளக்கியது போல், விராட் கோலி 3ம் நிலையில் இறங்க விரும்புகிறோம், ஆனால் சில வேளைகளில் 4-ம் நிலையில் அவர் களமிறங்குவதை நாங்கள் விரும்புகிறோம். வழக்கமாக, 4-ம் நிலை வீரர்களுக்கு 30 ஓவர்கள் கிடைக்கும், 30 ஓவர்கள் என்பது சதம் எடுக்க சிறந்ததொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுதான். மேலும் அணியில் ஒரு ஆழத்தன்மையை ஏற்படுத்துகிறது” என்றார்.
நேற்றைய தோல்வி குறித்து..
(31-40 ஓவர்கள்) ஆட்டத்தின் முக்கிய கட்டமாகும் இது. முதலில் முதல் 10 ஓவர்கள். முதல் 10-இல் போதுமான ரன்களை எடுக்கவில்லை. மேலும் பிட்ச் மந்தமடைந்து வந்தது. அதனால் பிற்பகுதியில் பெரிய ஷாட்களை ஆட முடியவில்லை. 37-வது ஓவர் முதல் அடித்து ஆட முனைந்தோம், ஆனால் எங்களால் பந்தை மட்டையில் சரியாக வாங்க முடியவில்லை. நானும் விராத்த்தும் நன்றாக நிலைப்பெற்றிருந்தோம், ஆனாலும் பெரிய ஷாட்கள் எங்களுக்கு சிக்கவில்லை.
மேலும் இங்கு புறக்களப்பகுதி பெரியது, பெரிய ஷாட்களை ஆடினால் அது பீல்டர்கள் கைக்கு சிக்காமல் ஆட வேண்டும், பிட்சின் மந்தத் தன்மையால் பவுலர்கள் வீசும் வேகத்தையும் பயன்படுத்த முடியவில்லை.
இவ்வாறு கூறினார் தோனி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago