2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் யுவராஜ் கலக்குவார்: முரளிதரன்

By செய்திப்பிரிவு

ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு விளையாடி வரும் இலங்கை சுழற்பந்து வீச்சு உலகச் சாதனை நாயகன் முத்தையா முரளிதரன், சக வீரரான யுவராஜ் சிங் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் மேட்ச்-வின்னராகத் திகழ்வார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இருபது ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து சொதப்பிய யுவராஜ் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தனது பாணி அதிரடி ஆட்டத்திற்குத் திரும்பியுள்ளார்.

38 பந்துகளில் 83 ரன்களை எடுத்த யுவராஜ் நேற்று 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து டெல்லி பந்து வீச்சை நாலாபக்கமும் சிதறடித்தார். சிக்ஸ்... சிக்ஸ்... சிக்ஸ் என்று அவர் பந்துகளை பறக்கவிட்ட காட்சி ரசிகர்களின் ஆதரவை அவருக்கு மீண்டும் பெற்றுத் தந்துள்ளது.

யுவராஜ் சிங்கின் இந்த திடீர் எழுச்சி குறித்து முத்தையா முரளிதரன் ஐபிஎல் இணையதளத்தில் கூறியதாவது:

நான் யுவராஜிடம் நிறைய பேசி வருகிறேன். அவர் குறைந்த ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டில் வல்லுனர் ஆவார். ஆனால் அவரது தன்னம்பிக்கை சற்று தளர்ச்சியடைந்திருந்தது. உலகக் கோப்பை இருபது ஓவர் இறுதிப்போட்டிக்கு பிறகே இந்திய ரசிகர்கள் அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். நான் 20 ஆண்டுகளாக உயர்மட்டத்தில் கிரிக்கெட் ஆடியுள்ளதால் யுவராஜ் சிங்கின் மனநிலை எனக்கு நன்றாக புரியவே செய்தது.

அவரது தன்னம்பிக்கையை மீட்டு விட்டால் அவர் வித்தியாசமான ஒரு வீரர் என்பதை அனைவரும் அறிவர். கடைசி 2 போட்டிகளில் அவர் ஆடிய ஆட்டம் நான் அவரைப்பற்றி நினைத்தது சரி என்பதை நிரூபித்தது. எனவே 2015 உலகக் கோப்பையில் அவர் இந்திய அணிக்காக பெரிய பங்காற்றுவார் என்று கருதுகிறேன், அவர் அந்தத் தொடரிலும் மேட்ச் வின்னராகத் திகழ்வார்.

இவ்வாறு கூறியுள்ளார் முத்தையா முரளிதரன்.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டவர் யுவராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவில் அவர் ஐபிஎல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை வைத்து ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து பிட்ச்களில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளிலும் அவர் கலக்குவார் என்று முரளிதரன் கூறுவது சற்று மிகையாகவே படுகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்