மோர்கன், கமின்ஸ் பிரமாதம், தினேஷ் கார்த்திக்கின்  ‘பிரமிப்பூட்டும் கேட்ச்’ ஏற்படுத்திய திருப்பு முனை: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு டாடா

By இரா.முத்துக்குமார்

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 54வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 60 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது. கொல்கத்தா 14 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்க வைத்தது.

பென் ஸ்டோக்ஸை நம்பி சேசிங் எடுத்தது ராஜஸ்தான். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. காரணம் இயோன் மோர்கன் கடைசியில் ஆடிய தாண்டவம்தான். 35 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்சருடன் அவர் 68 ரன்கள் குவிக்க ஆந்த்ரே ரசல் 10 பந்துகளில் 25 ரன்கள் விளாச கமின்ஸ் 15 ரன்கள் பங்களிப்பு செய்ய 18,19,20வது ஓவர்களில் கிட்டத்தட்ட 39 ரன்கள் விளாசப்பட்டது. கொல்கத்தா முதல் 6 ஓவர்களில் 55/1, 7-11 ஓவர்களில் 88/3, 11-15 ஓவர்களில் 132/5. 15-20 ஓவர்களில் 191/7.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்கத்திலிருந்தே கொல்ல வேண்டும் ஓவர் கொலவெறியுடன் ஆடியதால் மளமளவென விக்கெட்டுகள் சரிய 131/9 என்று தோற்று வெளியேறியது. முதல் ஓவரில் கமின்ஸை உத்தப்பா சிக்ஸ் அடிக்க 19 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 11 பந்துகளில் 18 என்று பாய்ந்தார். ஆனால் கமின்ஸ் பந்தை ட்ரைவ் ஆட முயன்ற ஸ்டோக்ஸின் மட்டை விளிம்பில் பட்டு பந்து ஸ்லிப் திசையில் பறக்க தினேஷ் கார்த்திக் அவருக்கு வாகு அல்லாத இடது புறம் பாய்ந்து பெரிய டைவைப் போட்டு ஒரு கையில் அதியற்புத கேட்சைப்பிடித்தார், ஸ்டோக்ஸே அதிர்ச்சியடைந்தார். திகைப்பூட்டும் கேட்ச் இதுவே திருப்பு முனை. கமின்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ஷிவம் மாவி, நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி (2/20) என்று அனைவரும் அபாரமாக வீசினர்.

மோர்கன் இல்லாவிட்டால் கொல்கத்தா ஒன்றுமில்லாமல் போயிருக்கும்: திவேத்தியா அபாரம்

ராஜஸ்தான் ராயல்ஸ் பீல்டிங்கைத் தேர்வு செய்ய கொல்கத்தா தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில், நிதிஷ் ராணா இறங்கினர். ஆனால் ஆர்ச்சர், சூரியன் படத்தில் கவுண்டமணி கூறுவது போல் ‘ஸ்டார்ட் மியூஸிக்’ என்று பந்து வீச ராணா முதல் பந்தே எகிறியதில் எட்ஜ் ஆகி டக் அவுட் ஆனார். தன்னோடு சேர்த்து ரிவியூவையும் காலி செய்தார்.

வழக்கம் போல் ஆர்ச்சர் 2 ஓவர் 3 ரன் 1 விக்கெட் என்று அசத்த மறுமுனையில் ரன்கள் கசிந்தது. ஷுப்மன் கில், திரிபாதி எதிர்தாக்குதல் நடத்த பவர் ப்ளேயில் 55/1 என்று ராணா விக்கெட் ஒன்றும் பாதிக்கவில்லை என்பது போல் ஆடினர்.

ஸ்டீவ் ஸ்மித்தும் தவறாக ஷ்ரேயஸ் கோபாலிடம் 4வது ஓவரை கொடுக்க 17 ரன்கள் விளாசப்பட்டது. இந்தத் தவறு மட்டுமல்ல மீண்டும் பின் ஓவர்களில் ஷ்ரேயஸ் கோபாலை பந்து வீச அழைத்ததில் 21 ரன்கள் விளாசப்பட்டது. வேகப்பந்து வீச்சு இருக்கும் போது இந்தத் தவறைச் செய்தார் ஸ்மித். இந்த இரண்டும் மாபெரும் தவறானது. 9வது ஒவரில் 73/1 என்று ‘நல்லாத்தானே போயிட்டிருக்கு’ என்று நினைத்த தருணத்தில் இந்த ஐபிஎல் தொடரின் கோல்டன் ஆர்ம் பவுலர் ராகுல் திவேத்தியா ஒரே ஓவரில் ஷுப்மன் கில் (36), சுனில் நரைன் (0) ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினார்.

34 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்த ராகுல் திரிபாதி புல்ஷாட்டில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து 39 ரன்களில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக்குகு திவேத்தியா அருமையான லெந்தில் பந்தை எதிர்த்திசையில் திருப்ப முயற்சி செய்ய தினேஷ் கார்த்திக் மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்மித் கையில் போய் உட்கார்ந்தது, டக் அவுட் ஆனார் கார்த்திக். திவேத்தியா 25 ரன்களுக்கு 3 விக்கெட். 13 ஓவர்களில் 100/5.

இப்போதுதான் வேகப்பந்து வீச்சு தெரிவு இருக்கும் போது, ஆந்த்ரே ரஸல் அப்போதுதான் இறங்கியிருக்கிறர் எனும்போது ஸ்மித் தெரியாததனமாக ஷ்ரேயஸ் கோபாலிடம் பந்தை கொடுக்க மோர்கன் கடைசி 4 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களை விளாசி 21 ரன்கள் வந்தது. ஆர்ச்சர் ஓவரில் ரஸல் ஒரு எட்ஜ் பவுண்டரி பிறகு ஸ்கொயர் லெக்கில் ஒரு ஃபிளாட் சிக்ஸ்.

16வது ஓவரில் கார்த்திக் தியாகி ரஸலிடம் வசமாகச் சிக்கினார். 2 பந்துகள் வாகாக மாட்ட 2 சிக்சர்கள். மீண்டும் இன்னொரு சிக்சருக்கு முயற்சி செய்யும் போது ரஸல் 10 பந்துகளில் 25 ரன்களில் தியாகியிடம் ஆட்டமிழந்தார். 17வது ஓவரில் ஸ்டோக்ஸ் ஸ்லோ பந்துகளாக வீசி மோர்கனை முடக்க ஒரு பவுண்டரியுடன் அந்த ஓவரில் 6 ரன்கள்தான் வந்தது. 18வது ஓவரை ஆர்ச்சர் பிரமாதமாக வீச 6 ரன்களே எடுக்க முடிந்தது, ஆர்ச்சர் 1-0-19-1 என்று பிரமாதப்படுத்தினார்.

19வது ஓவரை ஸ்டோக்ஸ் வீச கமின்ஸ் முதலில் ஒரு சிக்ஸ் அடிக்க மோர்கன் அதன் பிறகு 2 சிக்ஸ் ஒரு பவுண்டரி விளாச 24 ரன்கள் ஒரே ஓவரில் விளாசப்பட்டது. ஸ்டோக்ஸ் 3 ஓவர் 40 ரன்கள். கடைசி ஓவரில் தியாகி கமின்ஸை வீழ்த்த மோர்கன் கடைசி பந்தை சிக்ஸ் அடிக்க கொல்கத்தா 191/7 என்று முடிந்தது. தியாகி 4 ஓவர் 36/2. கமின்ஸ் 35 பந்துகளில் 68 ரன்கள் என்று திருப்பு முனை ஏற்படுத்தினார்.

கமின்ஸ் அபாரம்; கொல்கத்தாவை முடக்கிய ராஜஸ்தான் பவுலிங்:

சேசிங்கில் ப்ளே என்றவுடன் கமின்ஸின் முதல் ஓவரின் 5 பந்துகளில் 19 ரன்கள் விளாசப்பட்டது, உத்தப்பாவும், ஸ்டோக்ஸும் பாய்ந்தனர். ஆனால் கமின்ஸ் முதல் ஓவர் கடைசி பந்தில் உத்தாப்பாவை வெளியேற்றினார். தன் 2வது ஓவரில் இரண்டு பெரும் முதலைகளை விழுங்கினார், ஒன்று பென் ஸ்டோக்ஸ், தினேஷ் கார்த்திக் இடது புறம் டைவ் அடித்து உயரே சென்ற பந்தை பாய்ந்து பிடித்து அசத்திய திடுக்கிடும் கேட்சில் வெளியேறினார். ஸ்மித் பேக்ஃபுட் பஞ்ச் முயற்சியில் மட்டையின் உள்விளிம்பில் வாங்கி பந்தை ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டார்.

ஷிவம் மாவி அபாய வீரர் சஞ்சு சாம்சனை வெளியேற்றினார். பிறகு கமின்ஸ் வந்து ரியான் பராகை ஷார்ட் பிட்ச் பந்தில் காலி செய்து தன் 4வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஜோஸ் பட்லர், ராகுல் திவேத்தியா 43 ரன்களைச் சேர்த்தனர், ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை என்பது போல்தாம் இருந்தது. ஆனால் வருண் சக்ரவர்த்தி பட்லரை (35) வெளியேற்றினார். கொஞ்சம் போராடிப் பார்த்த போராளி திவேத்தியா 31 ரன்கள் எடுத்தார். ஆனால் வருண் இவரையும் வீழ்த்தினார். கடைசியில் எந்த ஒரு ஃபைட்டும் இன்றி 131/9 என்று முடிந்தது. வெளியேறியது.

ஆட்ட நாயகனாக பாட் கமின்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்